பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பெயரடை என்ற இலக்கணத்திற்கு இய சேர்ந்த வழக்கே முற்றிலும் பொருந்துகிறது என்பார் அறிஞர் கால்டுவெல். இதனைக் குறிப்புப் பெயரெச்சம் என இலக்கண நூல்கள் கூறும்

11. அகர சற்றுப் பெயரெச்சமும் உம் ஈற்றுப் பெயர் ரெச்சமும் பெயரடைகளாக அமையும். நிகழ்காலப் பெய ரெச்சமாகச் செய்கிற என்ற வாய்பாடமையும்.

செய்த பையன் செய்யும் வேலை செய்கிற வேலை 12. இய சேராமல் அகரம் சேர்ந்தே பல குறிப்புப் பெயரெச்சங்கள் அமைகின்றன.

நல்ல பையன் - பெத்த பில்ல (தெலுங்கு).பெரிய பெண் இந்த அகரம் முழுப் பெயர்களோடு இணைந்து பெய ரடைகள் ஆதலுண்டு.

மலைய, அனைய, தீய . பெயரெச்ச அகரமும் ஆறன் உருபு அகரமும் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பது இதல்ை புலப்படும்.

13. பல், சில் என்ற அடிப்படை வேர்ச் சொற்கள் அகரம் பெற்றுப் பல சில என்றாகிப் பெயரடையாதல் உண்டு.

பல கடல்கள் சில கடல்கள் 14. பெர்’ என்ற அடிச்சொல் உம் பெற்றுப் பண்படிப் பெயராகிப் பெயரடையாதல் உண்டு.

பெரும் புலவன் இவ்வாறே பண்பு அடிச்சொற்கள் மை கெட்டு ஒலிச் சூழ்நிலைக்கேற்ப மாறிப் பெயரடைகளாக வருதல் காண்க.

செம்பவளம், செங்காந்தள்,

செஞ்சாந்து, சேவடி, வெற்றில்