பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ill

வேற்றுமை உருபாகும். மரம், நிலம் முதலிய தமிழ்ச் சொற் களிலுள்ள அம், சொல்லீற்று விகுதியாகும்.

(2) எல்லாத் திராவிட மொழிகளிலும் மூவிடப் பெயர் கள் எழுவாயில் ஒருவகை வடிவையும், பிற வேற்றுமை உருபு களே ஏற்க ஒருவகைத் திரிந்த வடிவையும் பெறுகின்றன. பொதுவாக எழுவாயில் குறுகா வடிவும் ஏனைய வேற்றுமை களில் குறுகிய வடிவும் பெறுகின்றன.

நாம்-நம்; யான்-என்: நீ-நின்; தான்-தன்; தாம்-தம்.

தமிழைப்போல ஏனைய திராவிட மொழிகளிலும் இவ் விருவகை வடிவங்கள் உள்ளன.

கன்னடம் : நானு-நன்ன: நானு-நீனு-நின்ன; தானு

தன்ன

தெலுங்கு : நேனு-நன்னு: நீவு-நின்னு

2. இரண்டாம் வேற்றுமை

‘ஐ’ என்பது தமிழில் இரண்டன் உருபாகும். அம் என்பது பழங்கன்னட உருபு. -

பனம்காய் என்பது பனங்காய் என அமைதல் காண்க. அய் எனத் திரியும் அம் சொல்லீற்று நிலையாகும்.

காவலோனக் களிறஞ் சும்மே” என்னும் தொடரிலுள்ள அகரத்தை இரண்டன் உருபென்றும் அஃது அம்மின் திரிபே என்றும் கூறுவர். -

சங்க இலக்கியத்தில் மூவிடப் பெயர்களில் இரண்டன் உருபு விரிந்து வருதல் இல்லை என்பர்.

நிற் கண்டிசினேர் (ஐங். 85/5) நப் புரை (நற். 1268) தற் படர்ந்தனம் (குறு. 74/3)

1. D. N. Lu. 79