பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

செய்யாது என்னும் வினையெச்ச வடிவு, ஈற்றில் பெய ரெச்ச விகுதியாய அகரத்தைப் பெற்றும் பெயரெச்ச வடிவு அமைதல் உண்டு. இஃது அருகிய வழக்காகும். செய்யாத-செய்யாது-அ வாழாத-வாழாது+அ இலக்கணிகள் இதனை செய்+ஆ+த்+அ எனப் பிரித்துத் தகர ஒற்றை எழுத்துப்பேறு என்பர்.

4. ஏனைய திராவிட மொழிகளில்

மலையாளத்திலும் பழந்தமிழைப் போலவே எதிர்மறை வடிவம் உண்டு. அவ் வடிவில் ஆகாரமே எதிர்மறை இடைநிலை யாகும்.

இக் கால மலையாளம் இல்ல என்னும் சொல்லைப் பெற்று எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது.

கன்னடத்தில் அகரம் எதிர்மறைப் பொருளை உணர்த்தும் விகுதியாக வருகிறது.

இல்ல என்பது எதிர்மறை வினையாக வழங்குகிறது.

தெலுங்கிலும் அகரம் எதிர்மறைப் பொருளை உணர்த்தும் விகுதியாக வருகிறது.

இக் காலத் தெலுங்கில் லேது’ என்பது எதிர்மறை வினை யாக வழங்குகிறது.