பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மிகுதியாக எடுத்தாளுகின்றன. அத ஞ ல், பத்திரிகை நடை. புலவர் நடையோடு வேறுபடுகிறது. புலவர்கள் பழந் தமிழ் இலக்கியச் சொற்களையும், இலக்கண வடிவங்களையும் கையாளுகின்றனர். இவர்கள் நடையை இக் காலத்தில் செந்தமிழ் நடை என்பர். -

கொடுந்தமிழில் எத் தகைய கொடுமையும் நிலவவில்லை. செந்தமிழுக்கு மாறுபட்ட வழக்கே கொடுந்தமிழாகும். வளைவு, நெகிழ்வு என்னும் பொருள்களிலும் கொடுமை எனும் சொல் வழங்கிவருகிறது. வட்டாரத்திற்கு வட்டாரம் மொழி வழக்குகள் மாறி வருகின்றன. ஒலித்திரிபால் மாறு படுதலும், சொல் வழக்கால் வேறுபடுதலும் என மொழி இருவகையாகத் திரிந்து இயங்குகின்றது. இத்தகு வழக்கு களையே கொடுந்தமிழ் என்பர். சுருங்கக் கூறின் பேச்சு வழக் குத் திரிபு என இதனைக் குறிப்பிடலாம்.

தனிப்பட்ட ஒவ்வொருவர் பேச்சிலும் சில தனிக் கூறுகள் நிலவாமல் இல்லை. இவற்றைத் தனிப் பேச்சு (idiolect) என்பர். ஒருவருக்கு மேற்பட்டவர் பேசும் பேச்சு, பேச்சுநடை (dialect) என வழங்குகிறது. இனம் இனமாகக் கூடி வாழ்பவர் பேச்சுகளில் தனிக் கூறுகள் நிலவுகின்றன. இவற்றையும் பேச்சுமொழித் திரிபுகள் என்றே கூறலாம்.

பழங்காலத்திலேயே சொல் வழக்காறுகளில் இடத்துக்கு இடம் வேறுபாடிருந்தது. இலக்கண உரையாசிரியர்கள் அவற்றை எடுத்துக் காட்டியுள்ளனர்; தென் பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும், சோற்றைச் சொன்றி என்றும், குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும், வேணுட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும், பூழி நாட்டார் சிறு குளத்தைப் பாழி என்றும், பன்றி நாட்டாரும், அருவா நாட்டாரும் வயல் என்பதைச் செய் என்றும், சிறு குளத்தைக் கேணி என்றும், அருவா வடதலை நாட்டார் புளியை எகின் என்றும், சீத நாட்டார்