பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. தமிழ் உயர்தனிச் செம்மொழி

(1) தமிழ் என்ற சொல்லே திராவிடம் என வடமொழி யில் வழங்குகிறது என்பார் கால்டுவெல். தமிழைக் குறிக்க வழங்கிய திராவிடம் எனும் சொல் பிற்காலத்தில் திராவிட இன மொழிகள் அனைத்தையும் குறிக்கும் ப்ொதுச்சொல் லாகவும் வழங்கியது. -

(2) திராவிட மொழிகள் அனைத்திலும் சிறந்த இலக்கிய வளமும், திருந்திய அமைப்பும் கொண்டது தமிழே. மிகச் சிறந்த அடிப்படைச் சொல் வடிவங்களைப் பெற்றிருப்பதோடு மற்ற மொழிகளுக்கும் தரத்தக்க வகையில் ஒன்றுக்கு மேற் பட்ட் வடிவங்களையும் அது தாங்கி வருகிறது.

(3) தமிழர் தொழிலாற்றுந் திறமும், ஊக்க மிகுதியும், திரைகடல் ஓடியும் பொருள் தேடும் இயல்பும் படைத்தவர். மலேயா, ஈழம், ஆப்பிரிக்கா முதலிய வெளிநாடுகளில் தமிழரே ஏனைய திராவிட இனத்தவரினும் மிகுதியாய்ச் சென்று குடியேறியுள்ளனர். மதருஸ் என்பது தமிழ் நாட்டின் தலைநகராகும். மதில் (சுவர்) என்பது கோட்டைச் சுவரை உணர்த்திப் பின் அதல்ை சூழப்பட்ட நகரை உணர்த்திற்று என்பார் கால்டுவெல்.

சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி வடநூல்களிலும், அசோகர் கல்வெட்டுகளிலும் குறிப்புகள் கிடைக்கின்றன. தெலுங்கர்களால் தமிழ் அரவம் எனச் சுட்டப்படுகிறது.