பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

மூச்சொலிகள் (Aspirates) அற்ற மொழி (அ+ரவம்)-ஒலி யற்றது) என்ற பொருளில் இச்சொல் வழங்கி இருக்கலாம் எனக் கால்டுவெல் கருதுகிரு.ர்.

தமிழ் எனும் சொல்லின் தோற்றநில்ை புலப்படவில்லை: அதுபோலத் தெலுங்கு எனும் சொல்லின் பொருளும் தெளிவு பெறவில்லை எனக் கூறலாம். மலை மிகுந்த பகுதியில் வாழ்ந்த வர்கள் மலையாளிகள் எனப் பெற்றனர். அவர்கள் மொழி மலையாளம் ஆயிற்று. கன்னடம். கருநாடகம் எனும் சொல்லின் திரிபாய் இருக்கலாம். துளு, குடகு மொழிகளையும் சேர்த்துத் திருந்திய மொழிகள் ஆறு என்பர். ஏனைய இலக்கிய வளமற்ற மொழிகளாகும்.

திராவிட மொழிகள் ஒர் இனம் எனக் கருதப்படுகிறது. இம் மொழிகளுள் எம் மொழியிலிருந்தும் மற்றவை பிறந்தன என்று கூற முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான திரிந்த வடிவங்களைப் பெற்றுத் தனித்தனி மொழியாகக் கிளைத்துள்ளன. மலையாளம் ஒன்றைமட்டுமே நேரே தமிழி லிருந்து கிளைத்தது எனக் கூற முடியும்.

வடமொழித் தாக்குதலுக்கு மிகுதியாக உட்படாமல் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவது தமிழ் ஒன்றே. அதல்ைதான் இது செந்தமிழ் எனச் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் கவிஞர் மொழியிலும், உழவர் ஒலி யிலும்தான் மொழியின் தொன்மையையும், தூய்மையையும் காண முடியும். தமிழ் இவ்விரு நிலைகளாலும் வடமொழிக் கலப்புப் பெருமல் இயங்கி வருகிறது.

மிகவும் தொன்மை வாய்ந்த மொழிகளுள் தமிழும் ஒன்று. இது திருந்திய இலக்கிய வளம் மிக்க மொழியாகும். தெலுங்கும், கன்னடமும்கூட மிகப் பழமை வர்ய்ந்த மொழி களே எனினும், அவற்றின்கண் தமிழைப் போலத் தொன்ம்ை வாய்ந்த இலக்கியங்கள் இல்லை.

உயர்தனிச் செம்மொழி எனத் தமிழ் போற்றப்படுவதற் நரிய காரணங்கள்: