பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

‘(i) ஏனைய திராவிட மொழிகளின் இலக்கிய நடை பேச்சு நடையோடு முற்றிலும் வேறுபடுகிறது. தமிழ் இலக்கிய நடை, பேச்சு நடையினின்றே உருவாகியுள்ளது . பேச்சு மொழியே இலக்கியத்தில் பெரிதும் போற்றப்படுகிறது. தலைமையும், சிறப்பும் அதற்கே அளிக்கப்படுகின்றன. பேச்சு நடையும், இலக்கிய நடையும் பிரிவின்றி ஒத்தியங்கி வருகின்றன.

. (2) தமிழ் மொழியின் சொற்களும், இலக்கண வடிவங் களும் தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கின்றன. அகத் தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள், தமக்கு முன்பிருந்த ஆசிரியர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொண்ட மையை என்பர், என்மனர்’, என்ப’ எனும் தொடர்களால் குறிப்பிடுகின்றன. பிறமொழி இலக்கணம் தமிழின்கண் புகுத்தப்படவில்லை. தன்னியல்பாலெழுந்த இலக்கணமே அதற்கு அமைந்துள்ளது.

(3) ஒரு பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் வழங்குகின்றன. ஏனைய திராவிட ம்ொழிகளில் அவை ஒவ்வொன்றும் தனித்தனிச் சொற்களாக நிலவுகின்றன. இவ்வியல்பே தமிழின் சொல்வளத்துக்குக், காரணமாகும்.

வீடு, இல், மனை, குடில் எனும் சொற்கள் தமிழில் ஒரு பொருளையே குறிக்க வழங்குகின்றன. வீடு ஒன்றே இன்று பேச்சு வழக்கிலும், ஏட்டு வழக்கிலும் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. ஆனல், தெலுங்கில் இல் என்பதும் தன்னடத் தில் மனை என்பதும் தனித்தனிச் சொற்களாக வழங்குகின்றன.

(4) கன்னடமும், தெலுங்கும் இன்றைய தமிழோடு வேறுபட்டு வழங்கிலுைம், பழந்தமிழ் வடிவங்களோடு ஒத்திருப்பது தமிழின் தொன்மையைப் புலப்படுத்தும்.

(5). தமிழ் வேர் சொற்கள் பல, தெலுங்கு மொழியில் ஒலியிடம் பெயரல் (metathesis) எனும் விதிப்படி மாறியுள்ளன: