பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

எனவே, கி. பி. ஆயிரம்வரை தமிழ்ச் சொற்களில் தடை யெழுத்துகள் (stops) அனைத்தும் மொழி முதலிலேயன்றி இடையிலும் வல்லொலியாகவே ஒலித்தன என்று அறுதி யிட்டுக் கூறலாம்.

கி. பி. 1350லேயே சொல்லிடையே தடையொலிகள் ஒலிப்புப் பெற்றன.

தமிழை வடமொழியாளர்கள் Dravida என்றும், Dravadi என்றும் Damili என்றும் குறித்தனர். பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் ஒலிமாற்றி ஒலிக்கப்பட்டன. அதனல், அவற் றைக் கொண்டு பழைய ஒலிகள் இவை என்று நிறுவுவதற்கு வழி இல்லை. அவர்கள் ஒலிப்பு முறைக் கேற்பத் திரித்துக் கொண்ட வடிவங்களாகவே அவற்றைக் கொள்ளுதல் பொருந்தும்.” -

இக் காலத்தில் சில சொற்களில் மொழி முதலில் ஒலிம்பு ஒலியாக ஒலித்தலும் பழக்கத்தில் வந்துவிட்டது.

பல்லி, பலம், ப்லிபீடம், பலபம், பாரதி, கலாட்டா, கெலிப்பு, குடிசை, கும்மாளம், கொலுசு, கோவிந்தன். கோபுரம், கோபாலன், காயம், கடிகாரம், திட்டம், திடீர், தருமம், தயவு, திராவிடம், திரவம், முதலாயவற்றுள் மொழிக்கு முதலில் மெல்லொலிகளே அமைந்துள்ளன.

இவை வட தமிழகத்தில் மட்டும் இவ்வாறு ஒலிக்கின்றன என்றும், அதற்குத் தெலுங்கு, கன்னடச் சார்பே காரணம் என்றும் கூறுவர். ஆங்கிலமும் பிற மொழிக் கலப்பும் இதற்குக் காரணம் எனக் கூறலாம்.

சங்க இலக்கியத்தில் மொழி மூவிடத்தும் வல்லொலியே பெற்றது என்பதை முடிந்த முடியாகக் கொள்வதற்கில்லே. குமாரில பட்டர் காட்டும் எடுத்துக்காட்டுகளும், கல்வெட்டு கள் தரும் சான்றுகளும் பேச்சொலிகளிலிருந்து எடுக்கப்பட்ட

1. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும்-பக். 166. 2. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும்-பக். 163.

8