பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

சண்டேஸ்வர-தண்டேச்வர செருமுனை-திருமுனை’ தமிழில் தூங்கு என்பது தெலுங்கில் தூகு என்றும், ஊகு என்றும் வழங்குகின்றன.

இச் சொற்களில் சகரமே தகரம் ஆயிற்று என்பர்.2 சகரத்தில் தொடங்கும் சொற்கள் அனைத்தும் இவ்வாறு மாறுவதில்லை என்றும், சில சொற்களில் சகரம் நிலைபெறுகிறது என்றும் காட்டுவர். -

சரி, சா, சாத்து, சால், சாறு, சாற்று, சிந்து, சிலந்தி, சீ, சுர, சுரா, சூல், சூள், செருக்கு, செல், செரை, (செரங்கை)

இச் சொற்களில் சகரம் கெடவில்லை . தென் திராவிட மொழிகளில் சகரம் கெடுகிறது என்றால் அதற்கு மத்திய திராவிட மொழிகளிலும், பிராஹா (Brahui) நீங்கலாக ஏனைய வடதிராவிட மொழிகளிலும் சகரம் நிலை பெறுவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளது என்பர்.”

சகரமும் யகரமும் மாறி வருதல் உண்டு. நயத்தல்-நசை; நச்சு-நயம்; நம்பு-(நய் + பு) நம்பும் மேவும் நசையா கும்மே” என்பர் தொல்காப்பியர்.”

கயம்-கசம்

பய்ம்பொன்-பசும்பொன்-பய்-பச். இயைத்த-இசைத்த-ய, ச: ம்ய்-மாய்-மாசு (தெலுங்கு - மசி) எய்-ஏசு (எய்த) உயிர் (தமிழ்)-உசிர் (கன்) வயிறு (தமிழ்)-பசறு (கன்)

D. P. Lis. 115. 3. C. D. F. L j. 106. P.

1. C. 2. C. P. பக். 169. 4. உரியியல் சூ. 31.