பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

இம் மூன்றாம் பதிப்புப் பல திருத்தங்களைக் கொண்டு வெளிவருகிறது. மொழி ஒப்பியலும் வரலாறும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதால் அவற்றை ஒரே நூலாக வெளியிட்டுள்ளோம்.

எமது மொழியியல் என்னும் நூல் மொழிவிளக்க இயல் அடிப்படையில் அமைந்துள்ளது. இது முற்றிலும் ஒப்பியல் நோக்கிலும் வரலாற்றியல் அடிப்படையிலும், அமைந்துள்ளது. -

சில இடங்களில் தமிழ் மொழியின் விளக்க வியலும் தந்துள்ளோம். தமிழ் மொழியை அறியத் துணை செய்யும் அளவுக்கே பிற மொழிச் செய்திகள் தரப்பட்டுள்ளன.

செய்திச் சுமையைக் குறைத்து விதிகளைக் காட்டும் போக்கில் சான்றுகள் தரப்பட்டுள்ளன. -

இது நன்கு வெளிவர உதவிய போாசிரியர் திரு. இராம சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றியுடையேன்.

ரா. சீனிவாசன்