பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

நில் ஐகாரம் பெற்று நிலை என்றாவதால் ஐகாரம் ஆக்க விகுதி எனப்படும்.

இவற்றால் ஒரு குறிப்பிட்ட சொல் இடைநில்ை, விகுதி முதலியன ஒழிய முதல் நிலையாக நிற்பது பகுதி (stem) யாகும் என்பதும், பல பகுதிகளை ஒப்பிட்டு ஆக்க விகுதிகளை யும் ஒலித்துணைகளையும் நீக்கிக் காண நிற்பது அடிச்சொல் லாகும் என்பதும் பெறப்படுகின்றன. நன்னூலார் பகுதி எனக் காண்பது இவ்வடிப்படையில்தான் எனக் கொள்ளலாம். அறிஞர் க்ால்டுவெல்லும் . ஒலித்துணைகளும், ஆக்க விகுதி களும் நீங்க நிற்கும் முதல் நிலைகளையே அடிச்சொல் எனக் குறிப்பிடுகிரு.ர்.

. (5) நன்னூல் பகுதியை வினைப்பகுதி எனவும், பண்புப் பகுதி எனவும் இருவகையாகப் பிரித்துக் காண்கிறது.

நட, வா, மடி, விடு முதலியன வினைப் பகுதிகளாம். செம்மை, கருமை, வெண்மை முதலியன பண்புப் பகுதிகளாம். தெரிநிலை வினையின் பகுதிகள் செயல்வினைப் பகுதிகளாக வும், குறிப்பு வினையின் பகுதிகள் பண்புப் பகுதிகளாகவும் விளங்குதல் குறிப்பிடத் தக்கது. -

செய்தான்-செய்-தெரிநிலைவினை கரியன் -கருமை-குறிப்பு வினை

இப்பாகுபாடு தமிழ் வினைச்சொற்களை அறிய உதவுகிறது. வினைத்தொகை, பண்புத்தொகை முதலிய தொடர் நிலை களும் இவ்வடிப்படையிலேயே அமைந்துள்ளன.

கொல்யானை-கொல்-வினையடி (வினைத்தொகை) செந்தாமரை-செம்மை-பண்படி (பண்புத்தொகை)

3. ஒலிநயச் சேர்க்கை

அ, இ, உ முதலிய உயிர் ஒலிகள் ஒலிநயச் சேர்க்கை களாக அமைகின்றன என்று அறிஞர் கால்டுவெல் கருதுவார்.