பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

14. னகர ஈறு ஆண்பால் ஈறு எனினும், அது பல்வேறு மாற்று வடிவங்களாக வருகின்றது. அவை அன், ஆன், வன், நன், ஞன், இயன், ஒன், அனன், அவன், த்தன், க்கன் எனக் குறிப்பிடுவர்.’ - -

இவற்றுள் பெரும்பாலானவை சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பிற பிற்காலத்தவை.

அன்-உழவன் -குறு. 181/4. வன்-சிறுவன் -குறு. 45/4. நன்-பொருநன் -புறம். 78/6. இயன்-கம்மியன் -நற். 94/4. ஒன்-கிழவோன் -அக. 356/13. அனன்-பார்ப்பனன் -நற். 321/4. அவன்-தென்னவன். -அக. 138/7. :த்தன் என்பது சங்க கால நூல்களிலும் பிற்கால் நூலாகிய கலித்தொகையிலும் இடம் பெற்றுள்ளது.

ஒத்தன் -கலி, 60/9. ஒத்தன்-ஒருத்தன் எனத் திரிந்து வழக்காறு பெற் றுள்ளது.

க்கன் என்பது இடைகாலத் தமிழில் வருகிறது: சிறுக்கன்-பெரியாழ்வார் திருமொழி 1. 4. 2 15. நன் என்பதன் திரிபே ஞன். நன் என்பது. முதன் முதலில் வினவடிவத்தில் இடம் பெற்றுப் பின் பெயர் வடிவங் களிலும் புகுந்திருக்க வேண்டும். . -

1. D. N. 35 2. D. N. L. 35 3. D. N. L. 37