பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பதஹேனு (15) என்னும் தெலுங்குச் சொல்லில் ஏனு என்பது ஐந்தைக் குறிக்கும்.

பெயரடைகள் : தமிழ்-ஐம்பது; மலையாளம்-ஐம்பது. கன்னடம்-ஐவத்து; தெலுங்கு ஏபை, எனபை, ஐந்நூறு.

இரட்டிப்பில் ஐயைந்து என வரும். அய், ஏ, ஏனு முதலியன அடிச் சொற்களாகும். கால்டுவெல் அய் என்பதே அடிச் சொல் என்பர். ஏனைய மத்திய திராவிட மொழி களோடு ஒப்பிட்டுக் காணுங்கால் , ஒரு புது உண்மை புலகிைறது. மத்திய திராவிட மொழிகளில் சகரம் கெடாத வடிவங்கள் உள்ளன, கோந்தி மொழியில் Saiyuung என்ற வடிவும், கூவி மொழியில் Sing என்ற வடிவமும் வழங்கு கின்றன. இவற்றை நோக்கச் சப்ம் என்பதே பழைய வடிவ மாக இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.’

6. ஆறு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனும் நான்கு மொழிகளிலும் ஆறு என்ற சொல். வழக்கே உள்ளது. அறு ஆறு என்பன அடிச்சொற்கள். - - -

அறுவர். அறுபது, அறுநூறு முதலியன ப்ெயர் அடைகள். ஆறுபேர்” என நெடில் வடிவமும் அடையாக வரும்.

“சாறு என்பதே ஆறு என்பதன் பழைய வடிவாக இருந் திருக்க வேண்டும். மத்திய திராவிட மொழியாகிய கோந்தி மொழியில் சாருங்க் (Saarung) என்ற வடிவம் வழங்குகிறது.

எழு தமிழ் - ஏழு: மலையாளம் - ஏழு; கன்னடம்-ஏழு: தெலுங்கு-ஏடு.

ஏழ் என்பதே தொல்காப்பியர் சுட்டும் வடிவமாகும். இஃது ஏழு எனவும் வழங்குகிறது.

1. D. N. பக். 151