பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

99


பாத்திரங்கள் பல இராக்கில் கிடைத்துள்ளன.[1] கைப்பிடி களுடன் ஓவியம் தீட்டப்பட்ட பாத்திரங்கள் பல மால்ட்டாவில் கிடைத்துள்ளன.[2] கைப்பிடியுள்ள மூடிகள் ஜெம்டெட்நஸ்ர் என்னும் இடத்தில் கிடைத்துள்ளன[3]

மைக்கூடுகள்

மொஹெஞ்சொ-தரோவில் ஆடுகள் போலச் சிறிய கற்களில் செதுக்கப்பட்ட உருவங்கள் கிடைத்தன. அவற்றின் மேற்புறம் குழியாக இருந்தது. அக்குழி மை ஊற்றிக்கொள்ளப் பயன்பட்டதாம். இப்பொருள்கள் அங்கு மிகுதியாகக் கிடைக்கவில்லை. ஆனால், இவை போன்றவை பல கிரிஸை அடுத்த ஏஜியன் தீவுகளில் அகப்பட்டுள்ளனவாம். இவை ‘உர்’ என்னும் இடத்தில் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் மைக் கூடுகளாகவே பயன்பட்டன என்று ஸர் ஆர்தர் இவான்ஸ் அறைகின்றார். இஃது உண்மையாயின், சிந்துப் பிரதேச மக்கள் 5000 ஆண்டுகட்கு முன்னரே மையைக் கொண்டு எழுதும் முறையைக் கையாடி வந்தனர் என்பது அறியத்தகும்.

புரிமணைகள்

பல வகை மட்பாண்டங்களை வைக்கப் புரிமனைகள் பயன் பட்டன. அவை மண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. அவை உயரமாகவும் பருமனாகவும் அமைந்துள்ளன. ஹரப்பாவில் 20 செ.மீ. உயரமுள்ள புரிமணைகள் கிடைத்தன. பெரியதாழிகளை வைக்க மரப்புரிமனைகளே பயன்பட்டன. சாதாரண மான புரிமணை போன்று கருங்கல்லைக் கொண்டு 30 செ.மீ. உயரத்தில் செய்யப்பட்ட புரிமணைகள் பல மொஹெஞ்சொ-த்ரோவில்


  1. ‘Iraq’ Vols. 1-4 published by the British School of Archaeology
  2. M.A.Murray’s ‘Excavations in Malta’, part II, pp. 26-28.
  3. Dr.Mackay’s ‘The Indus Civilization’, p.151.