பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மொஹெஞ்சொ - தரோ


கிடைத்தன. இவை இலிங்கங்களின் அடியில் வைக்கத்தக்க ‘யோனிகள்’, என்று இவற்றைக் கண்டு பிடித்த இராய்பஹதூர் தயாராம் சஹனி கூறியுள்ளார். ஆயின், டாக்டர் மக்கே, இவை தூண்கட்கு அடியில் வைக்கத்தக்க கல் புரி மணைகள்’ என்று கூறியுள்ளார்.

புதைக்கப்பட்ட தாழிகள்

பல வீடுகளில் தானியங்களைக் கொட்டிவைக்கப் பயன் பட்ட பெரியதாழிகள் பாதியளவு நிலத்திற் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மேற்பாகம் மிக்க வழவழப்பாக அமைந்துள்ளது. எலிகள் ஏறாதிருத்தற்கென்றே இவ்வளவு வழவழப்பாக இம்மேற்பகுதி அமைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் மக்கே கருதுகின்றார். நிலத்திற் புதைத்த மட்பாண்டங்களிற்றான் நகைகளும் பிற விலை உயர்ந்த பொருள்களும் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இப்பழக்கம் சிந்துப் பிரதேசக் கிராமங்களில் இன்றும் இருப்பதாக அறிஞர் கூறுகின்றனர்.

எலிப் பொறிகள்

எலிகளைப் பிடிக்கும் பொறிகள் சுட்ட களிமண்ணால் இயன்றவை. இவற்றில் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டன. பொறிக்குள் உணவு முதலியவற்றை இரையாக வைத்து எலிகள் பிடிக்கப்பட்டு வந்தன.

பிங்கான் செய்யும் முறை

சில பெரிய தாழிகளின் வெளிப்புறமும் சிறிய பாண் டங்களும் தட்டுகளும் பீங்கான் போலப் பளபளப்பாக்கப் பட்டுள்ளன. இதனால், சிந்துப் பிரதேச மக்கள் அப்பண்டைக் காலத்திலேயே பீங்கான் செய்யும் முறையை ஒருவாறு உணர்ந்திருந்தனர் என்பது புலனாகிறது. இப்பிங்கான் போன்ற பளபளப்பு உண்டாக்கப் பல பொருள்களைச் சேர்த்து அரைத்த கலவையையே பயன்படுத்த வேண்டும். சிந்துப் பிரதேச மக்கள்