பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணிப் பொருள்கள்

111


வேல்கள்

வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல்களே பலவாகும். அவை கூரிய முனையுடன் எளிதில் பாய்ந்தோடக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.அவற்றுட் பெரியவை37.5 செ.மீ.நீளமும் 12.5 செ. மீ. அகலமும் பல்வேறு வடிவமும் கொண்டவையாக உள்ளன. சிறியவையும் கூர்மை பொருந்திக் காணப்படுகின்றன.

அம்பு முனைகள்

இவை மெல்லிய வெண்கலத் தகடு கொண்டு செய்யப் பட்டவை. இவையே நிரம்பக் கிடைத்துள்ளன. இவை வேட்டையாடுவோரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகிறது. இவற்றுட் பல இருபுறமும் இரம்பத்தின் அமைப்பை உடையவை. ஈட்டி முனைகளைப் போலவே இவையும் மரக் கைப்பிடி உடையனவாகும்.

இரம்பம்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த இரம்பங்கள் பல திறப்பட்டவை. ஒன்று அரை வட்ட வடிவத்தில் கூரிய பற்கள் வெட்டப்பட்டுள்ளது. வெண்கல இரம்பம் ஒன்று 38, 5 செ. மீ. நீளமும், 8.5 செ.மீ. அகலமும், 1 செ.மீ. கனமும் உடையது.இதற்கு அகன்ற மரக்கைப்பிடி இருந்திருத்தல் வேண்டும். கைப் பிடியை இரம்பத்தோடு பொருத்துதற்கென்று மூன்று துளைகள் இரம்பத்தில் அமைந்துள்ளன. இதன் பற்கள் வியப்புறு முறையில் அமைந்துள்ளன. இத்தகைய இரம்பம் சுமேரியாவிலும் எகிப்திலும் காணப்படவில்லை. இது சிந்துப் பிரதேசத்திற்கே தனிப்பெருமை தரவல்லதாக இருக்கின்றது. சிறிய இரம்பங்கள் சங்கறுக்கப் பயன்பட்டன போலும்! என்னை? இன்றும் வங்காளத்திற் சங்கறுப்பவர் இத்தகைய சிறிய இரம்பங் களையே பயன்படுத்துகின்றனர். ஆதலின் என்க. ‘சங்கறுப்ப தெங்கள் குலம், சங்கரனார்க் கேதுகுலம்’ என்று பாடிய