பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மொஹெஞ்சொ - தரோ


எண் இடப்பட்ட கருவிகள்

இந்நகரத்திற் கிடைத்த செம்புக் கருவிகளின் குவியல் ஒன்றில் இருந்த பல கருவிகள் சித்திரக் குறிகள் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகையக் குறியுள்ளவை ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. “இவை அரசாங்கத்தார்க்கு உரியவை யாகலாம். அதனாற்றான். களவு போகாதிருக்க எண் இடப்பட்டுள்ளன. இங்ஙனம் கருவிகள் மீது எண் இடும் பழக்கம் பண்டை எகிப்திலும் கையாளப்பட்டது”, என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.