பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விலங்குகளும் பறவைகளும்

119


எருதும் ஒன்றாக உள்ளது. சிவபிரான் பசு (விலங்குகட்கு பதி (தலைவன்) எனப்படுவதையே அம்முத்திரை குறித்ததாதல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து. அப்பழங்கால முதலே எருது சிறப்புடை விலங்காகக் கருதப்பட்டமையாற்றான் போலும், அது சிவனார்க்குரிய ஊர்தியாகப் பிற்றை நாளில் கருதப்பட்டது; ‘நந்தி’ என்னும் பெயர் இடப்பட்டது.

வேறோர் இனத்தைச் சேர்ந்த எருதும்[1] சிந்துப் பிரதேசத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அஃது இன்றைய ஐரோப்பிய எருதுகட்குத் தந்தை என்று அறிஞர் தீக்ஷத் கருதுகின்றார்; ‘இவ்வெருது உருவங்கள் ஏராளமாகச் சுமேரியர் முத்திரைகளில் காணப்படுகின்றன.இவற்றைச் சிந்துப் பிரதேச மக்கள் நன்கு அறிந்திருந்தனர்; இவை இந்தியாவிலும் இருந்தன’, என்று அவர் கூறுகின்றார்.

நாய்கள்

வீட்டு விலங்குகளுள் நாயும் ஒன்று அன்றோ? நாய் இல்லாத ஊர் ஏது? நகரம் ஏது? செங்கல்லைக் காயவைத்திருந்த போது அதன்மீதுநாய்கள் நடந்துசென்றமையால் உண்டானஅடிச்சுவடுகள் அப்படியே இருக்க, அக்கற்கள் சூளையிடப்பட்டு, வீடுகள் கட்டப் பயன்பட்டுள்ளன. அக்கற்களில் இன்றும் காணப்படும் அடிச்சுவடு களைக் கொண்டும் பதுமைகளைக் கொண்டும் அறிஞர், மொஹெஞ்சொ-தரோவில்நாய்கள் இருந்திருத்தல்வேண்டும் என்று கருதுகின்றனர். சாதாரண நாய்கள் அன்றி வேட்டை நாய்களும், இக்காலத்துப் ‘புல்-டாக்’ (Bull-dog) போன்ற நாய்களும் அங்கு இருந்தனவாம். ஓரின நாய்கள் குட்டை கால்களுடனும் சுருண்ட வாலுடனும் இருந்தன. மற்றோர் இன நாய்கள் நீண்ட அகன்ற காதுகளுடனும் நீண்ட வாலுடனும் இருந்தன. சில நாய்கள்


  1. Bostauras (parent of the modern European cattle) K. N. Dikshit in his ‘Pre - historic Civilization of the Indus Valley’, p.39.