பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மொஹெஞ்சொ - தரோ


நிறங்குன்றாமல் பளபளப்பாகவே இருக்கின்றன. மற்றொரு மாலையில், தங்கத்தால் தட்டையாகச் செய்யப்பட்டு இரண்டு மணிகளைத் சேர்த்துப் பற்றவைத்துள்ளவை நீளமாகக் கோக்கப் பட்டுள்ளன. இவை போன்ற மணிகள் பாபிலோனியா, எகிப்து, ட்ராய் முதலிய இடங்களிலும் கிடைத்தன. இவ்வெழில் மிக்க அணிவடங்களின் வேலைப்பாட்டைக் கொண்டு அக்கால மக்களின் சிறந்த அறிவை நன்குணரலாம்.

ஹரப்பாவில் கிடைத்த கழுத்து மாலைகள்

ஹரப்பாவில் கிடைத்த மாலைகள் பலவாகும். அவை அனைத்தும் வியத்தகு வேலைப்பாடு கொண்டவை. 240 மணிகள் கோக்கப்பட்ட நான்கு சாரங்கள் கொண்ட மாலை, 27 தங்க மணிகள் பற்பல வடிவிற்செய்து கோக்கப்பட்டமாலை, பலவகை வடிவிற் செய்யப்பட்ட 70 தங்கமணிகள் கொண்ட மாலை, பலவகைக் கல்மணிகளும் பொண்மணிகளும் கோக்கப்பட்ட மாலை எனப் பலகை மாலைகள் கிடைத்துள்ளன. அவை இடையிடையே 7 பதக்கங்கள் முதல் 13 பதக்கங்கள் வரை கோக்கப்பட்டுள்ளன. இரத்தினக் கற்களால் ஆன மூன்று மாலைகளும் கிடைத்துள்ளன. சுருங்கக் கூறின், இத்துணை விதவிதமான மாலைகள் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தில. கழுத்தை இறுக்கிய முறையில் அணியப்படும் அட்டிகையும் அக்காலத்தில் இருந்தது. ஆடவரும் கழுத்துமாலைகள் அணிந்திருந்தனர் என்பது அறியத்தக்கது.[1]

அழகொழுகும் இடைப்பட்டைகள்

பிற நகைகளில் இடுப்பில் அணியப் பயன்படும் இடைப்பட்டைகளே (ஒட்டியாணங்களே) சிறப்பானவை. இவை பண்பட்ட வேலைப்பாட்டுடன் கூடியூவை. இவற்றுள் இரண்டேகுறிப்பிடத்தக்கவை; ஒவ்வொன்றும் ஆறு சரங்களைக்


  1. M.S.Vats’s ‘Excavation at Harappa’, Vol.I. pp. 65,294,298.