பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/151

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அணிகலன்கள்

135


கொண்டது. ஒவ்வொரு சரத்திலும் பீப்பாய் போலச் செதுக்கப் பட்ட சிவப்புக்கல் மணிகள் கோக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மணியும் 12 செ. மீ. நீளம் இருக்கிறது. இச்சிவப்பு மணிகட் கிடையே வெண்கலமணிகளும் கோக்கப்பட்டுள்ளன. இவை உருண்டையாயும் மலர் மொட்டுகள் போலக் குமிழாகவும் செய்யப்பட்டுள்ளன. இவையன்றி வெண்கலச் சதங்கைகளும் முத்துக்களும் கோத்த இ ைப் பட் ைகளும் சில கிடைத்தன. இவை செந்நீல நிறத்துடனும் கண்கவர் வனப்புடனும் காணப் படுகின்றன. இப்பட்டைகளின் முடிவில் முகப்புகள் உள்ளன. அவை வெண்கலத்தாற் செய்யப்பட்டு, ஆறு சரங்களைக் கோத்தற்கு ஏற்றவாறு ஆறு துளைகளுடன் காணப்படுகின்றன. இவ்விடைப் பட்டைகள் களிமண் பதுமைகளிற் காணப்படும் இடைப்பட்டைகளைப் பெரிதும் ஒத்துள்ளன. ஒவ்வொன்றும் 100 செ. மீ. நீளம் இருக்கின்றது. இவற்றில் உள்ள கடினமான சிவப்புக் கற்கள் நன்கு மெருகிடப்பட்டுள்ளன. இவை ‘குருந்தக் கல்’ கொண்டு மெருகிடப்பட்டன என்று அறிஞர் அறைகின்றனர்.

துளை இட்ட பேரறிவு

மெருகிடப்பட்டமணிகளின் நடுவில் சரடு நுழைவதற்காகத் துளைகள் இடப்பட்டுள்ளன. அத்துளைகள் மிக்க ஒழுங்குடன் அமைந்துள்ளன. மணிகளின் இரண்டு பக்கங்களும் துளையிடப் பட்டுள்ளன. எல்லாத் துளைகளும் ஒரே அளவில் அமைந் திருத்தலே வியப்புக்குரியது. இங்ஙனம் திருத்தமான முறையில் துள்ையிடுவதற்கென்று அப்பேரறிஞர் பயன்படுத்திய நுட்பமான கருவி யாதென்பது விளங்கவில்லை. அங்குக் கிடைத்துள்ள செம்பாலான நுட்பமான துளையிடும் கருவிகளே இவ்வற்புத வேலைக்குப் பயன்பட்டிருக்கலாம். இவ்வற்புத வேலைப்பாடு அவ்வறிஞர் தம் நுண்ணறிவை நன்கு விளக்குவதாகும்.


1. Dr. E.Mackays ‘The Indus Civilization’, p.108.