பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மொஹெஞ்சொ - தரோ


தகடுகளை நன்கு மெருகிட்டுப் பளபளப்பாக்கிக் கண்ணாடிக ளாகப் பயன்படுத்திக்கொண்டனர்; அவற்றின் பளபளப்பு மங்கிவிடாமல் இருக்க, ஒரங்களை மடக்கி அரண் செய்திருந்தனர். இங்ஙனம் பகுத்தறிவுடன் செய்யப்பட்ட கண்ணாடிகள் பல அளவுகளை உடையவை; மரக் கைப்பிடிகளைக் கொண்டவை. மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்த சில கண்ணாடிகள் முட்டை வடிவில் அமைந்துள்ளன! சில வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஒரு கண்ணாடி 22 செ. மீ. உயரம் இருக்கிறது.இத்தகைய கண்ணாடிகள் எகிப்திலும் கிடைத்துள்ளன.

மகளிர் கூந்தல் ஒப்பனை

சிந்து வெளியிற் கிடைத்த பெண் படிவங்களைக் கொண்டு, அக்கால மகளிர் தங்கள் கூந்தலை எவ்வெம் முறையில் ஒப்பனை செய்துகொண்டனர் என்பதை ஒருவாறு உணரலாம். அம்மகளிர் கூந்தலை நன்றாகச் சீப்பிட்டு வாரிப் பின்னி விட்டிருந்தனர். கோதிச் சுருட்டி நாடாவால் கட்டி இடப்புறம் சாய்த்துக் கொண்டைபோலமுடிந்திருந்தனர். கூந்தலைப்பின்னிநாடாவைக் கொண்டு முடிந்திருந்தனர்; கூந்தலைப் பின்னி நாடாவைக் கொண்டு பூப்போல முடிப்பிட்டு, விதவிதமாக (கண்ணன் கொண்டை போட்டிருப்பதுபோல) மேலே தூக்கி முடிந்து, அம்முடிப்புகளில் பெர்ன், வெள்ளி, தந்தம், எலும்பு முதலிய வற்றால் ஆன கொண்டை ஊசிகளைத் தத்தம் தகுதிக் கேற்றவாறு செருகிக் கொண்டனர்; பலவகை நறுமலர்களைச் சூடிவந்தனர். மைந்தர் கூந்தல் ஒப்பனை

ஆடவர் சிலர் தம் சிகையைக் குறுகலாக வெட்டிக் கொண்டிருந்தனர்; சிலர் நீளமாக வளர்த்துச் சுருட்டிப் பின்புறம் முடிந்திருந்தனர்; அது சரிந்துவிடாமல் இருக்கக் கொண்டை ஊசிகளையும் நாடாக்களையும் பயன்படுத்தினர்; சிலர் தலை நடுவில் வடு எடுத்துமயிரை அலை அலையாகச் சீவிவிட்டிருந்தனர். வேறு சிலர் தலைமயிரைக் கோதிச் சுருட்டி உச்சியிற் கட்டிக்