பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

151


இது கண்ணுக்கு மையாகவும், மட்பாண்டங்கள் மீது பச்சை நிறம் பூசவும் பயன்பட்டிருக்கலாம் என்று டாக்டர் மக்கே கருதுகிறார். இதுபோன்ற பச்சை நிறப்பொருளைப் பண்டை எகிப்தியர் கண்ணுக்கே பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு முகத்திற் பொடி பூசிக் கொள்ளும் பழக்கம் பண்டைக் கிரிஸ், சீனம் ஆகிய நாடுகளிலும் இருந்தன.