பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மொஹெஞ்சொ - தரோ


சிந்துவெளி மக்கட்குப் பின்

இங்ஙனம் பெருஞ் சிறப்புடன் நடைபெற்று வந்த மேற்குப்புற வாணிபம், ஆரியர் வந்தவுடன் திடீரென நின்று விட்டது. ஆரியர் பஞ்சாபிலிருந்து, பின் கங்கைச் சமவெளியிற் குடி புக்கனர். அவர்கள் இங்ஙனம் உள்நாட்டில் தங்கிவிட்டதாலும் சிந்துவெளி மக்கள் நிலை குலைந்து விட்டனர் ஆதலாலும் அவ்வாணிபம் அடியோடு நின்றுவிட்டது. அதனாற்றான், சிந்து வெளிநாகரிக காலத்திற்குப்பிற்பட்ட ஆரம்ப அசிரியப் பேரரசின் காலத்திலும், எகிப்தியர் இடை-கடை ஆட்சிக் காலங்களிலும் அவ்விரு நாடுகளிலும் இந்தியப் பொருள்களே கிடைத்தில போலும்![1]

நிறைக் கற்கள்

கல்லால் செய்யப்பட்ட நிறைக் கற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் வழவழப்புடனும் பளபளப்புடனும் காணப்படுகின்றன. நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று அளவுகளும் ஒரே முறையில் இருக்கும்படி செய்துள்ள கற்களே பலவாகும். இவை மிகச் சிறிய அளவு முதல் 274938 கிராம் (gramme) வரை பல்வேறு நிறைகளைக் குறிப்பனவாக இருக்கின்றன, உச்சியிலும் அடியிலும் தட்டையாக்கப்பட்ட உருண்டை நிறைகள் அடுத்தாற்போல் மிகுதியாக இருப்பவை ஆகும். இவற்றுள் சில வியத்தகு பேரளவைக் குறிப்பன. மூன்றாம் வகையான நிறைகள் உருண்டு நீண்டனவாக இருக்கின்றன. இம்மாதிரி நிறைகள் சுமேரியா, ஏலம், எகிப்து ஆகிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. வேறு சில நிறைகள் இன்றைய விறகு விற்கும் கடைகளில் இருப்பவை போலப் பெரியனவும் உச்சியில் வளையத்திற்கு அமைந்த துளை உடையனவுமாகக் காணப்படுகின்றன. அவை கூம்பிய உச்சியை உடையன. அவற்றுள் ஒன்று 25 கிலோவுக்கு மேற்பட்ட


  1. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the I. V.’ p.57