பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மொஹெஞ்சொ - தரோ


அதைக் கொண்டு அந்நகரத் தராசுகள் எளியவை எனக் கூறுதல் தவறு. நிறைகளை நோக்க தராசுகள் வன்மையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகும். நம் நாட்டு மண்டிக் கடைகளிலும் விறகுக் கடைகளிலும் பயன்படும் பெரியதராசுகள் பல அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று டாக்டர் மக்கே கருதுகிறார்.

அளவு கோல்

அக்காலத்தில் அளவு கோல்களும் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், அவற்றுள் ஒன்றேனும் கிடைத்திலது. ஒரு சிப்பியின் உடைந்த பகுதியில் சில அளவுக் குறிகள் குறிக்கப் பட்டுள்ளன. அப்பகுதி நீளப்பகுதி ஒன்றின் துண்டாகும். அதில் இரண்டு வித அளவுகள் காணப்படுகின்றன. அவை தசாம்ச பின்னத்தைக் குறிப்பனவாகும். அக்காலத்தவர், இச்சிற்பிப் பகுதிகள் மீது தசாம்ச பின்ன அளவுகளைக் குறிப்பிட்டு, அப்பகுதிகளை உலோகத் தகட்டில் பொருத்திப் பதிந்திருக்குமாறு செய்து, நீட்டல் அளவைக்குப் பயன்படுத்தினர் போலும்! இந்தத் தசாம்ச பின்ன அளவைச் சிந்து வெளி நாகரிக காலத்திலும் அதற்குச்சிறிது முன்னரும் ஏலம், மெசொபொட்டேமியாவிலும் வழக்கில் இருந்தது. என்னை? இந்த அளவை பழைய எலமைட் சாஸனங்களிலும், மெசொபொட்டேமியாவில் உள்ள ஜெம்டெட் நஸ்ர் (Jemdet Nasr) என்னும் இடத்திற் கிடைத்த பண்டைச் சாஸனங்களிலும் காணப்படலாம் என்க.[1]

முத்திரை பதித்தல்

சிந்து வெளி மக்கள் விற்பனையான பொருள்கள் மீதும், பொருள்கள் நிறைந்த தாழிகள் வாய்ப்புறத்தில் உள்ள மூடி மீதும் பூட்டப்பெற்ற வீட்டுக் கதவில் இருந்தபூட்டுகள் மீதும்


  1. Dr. Mackay’s ‘The Indus Civilization’, pp.133-136.