பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

165

முத்திரையிட்டு வந்தனர்.[1] இவ்வழக்கம் இன்னும் இருந்து வருகிறதன்றோ? இத்தகைய் முத்திரைகளும் பிற இலச்சினை பதித்த தாயித்துகளும் பிற பண்டை நாடுகளில் களிமண்ணாற் செய்யப்பட்டிருந்தன. ஆனால் சிந்து வெளியில் அவை செம்பாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டுள்ளன.

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த சுட்ட களிமண் துண்டு ஒன்றில், நெற்றி நடுவே நீண்ட ஒற்றைக் கொம்புடைய குதிரைபோன்ற நூதன விலங்கின் உருவம் ஒரு புறம் பதிந்திருந்தது. மறுபுறம் நாணற்கட்டு ஒன்று கயிறுகொண்டு இறுக்கிக் கட்டப்பட்டு இருப்பது போன்ற உருவம் பதிந்துள்ளது. ஆகவே, இந்த முத்திரை, நாணலால் செய்யப்பட்ட பெட்டிகட்கோ கதவுகட்கோ பொருத்தும் தனிச் சிறப்புடையதாக இருத்தல் வேண்டும் என்று தீக்ஷத் கருதுகின்றார். இத்தகைய நூதன விலங்கு பதிக்கப்பட்ட முத்திரைகள் பல, மொஹெஞ்சொத்ரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. சுட்ட மண்ணாலான முத்திரைகள் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டுமே முத்திரையிடப் பயன்பட்டன.[2]




  1. இப்பழக்கம் புகார் முதலிய துறைமுகப் - பட்டினங்களில் இருந்ததென்பதைச் சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்களால் உணர்க
  2. K.N. Dikshit’s ‘Pre-historic Civilization ofthe IV’ p.44.