பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

3


நீக்கப்பட்ட அப்பொருள்கள், கவனிப்பாரற்று நாளடைவில் மண்ணுள் புதையுண்டன.கற்கால மக்கள் மண்ணால் தாழிகளைச் செய்து இறந்தவர் உடம்புகளை அவற்றுள் வைத்து ഥങ്ങജൂൺ புதைத்து வந்தனர். தென் இந்தியாவில் இவ்வகைத் தா, கள் புதுக்கோட்டையில் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டன. பண்டை மக்கள் நல்லிடங்கள் தேடி அடிக்கடி இடம் மாறித் திரிந்தனர். ஆதலின், ஆங்காங்குப் பழுதுற்ற பொருள்களைப் போட்டுப் போயினர். அப்பொருள்கள் நாளடைவில் மண்ணுள் மறைப்புண்டன. பழங்கால மன்னர் உடலங்கள் புதைக்கப் பெற்ற இடங்களில் கற்கோபுரங்கள் கட்டப்பட்டன. அவற்றின் மீது அக்காலச் சித்திர எழுத்துக்களும் பல சித்திரங்களும் பொறிக்கப்பட்டன. ஆற்று ஓரங்களிலும் கடற்கரையை அடுத்தும் ஒழுங்கான முறையில் அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்த செம்பு - வெண்கலக் கால மக்கள் முறையே ஆற்று வெள்ளத்திற்கும் கடலின் கொந்தளிப்பிற்கும் அஞ்சி அந்நகரங் *տոպմ தம் பொருள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டமையும் உண்டு. வேறு சில இடங்கள், வேற்று மக்கள் படையெடுப்புக்கு அஞ்சித் துறக்கப்பட்டிருக்கலாம். சில நகரங்கள் எரிமலைகளின் சேட்டையால் அழிவுற்று இருக்கலாம். சில நகரங்கள் மண் மாரியால் அழிந்ததுண்டு. இங்ஙனம் பல்வேறு காரணங்களால் அப்பண்டை மக்கள் வாழ்ந்து வந்த கிராமங்களும் நகரங்களும் கைவிடப்பட்டு, நாளடைவில் மண் மூடப்பட்டு விட்டன. பல நகரங்கள் கடலுள் ஆழ்ந்தன. பல ஆற்றங்கரைகளின் அடியில் புதையுண்டு விட்டன. பல சமவெளிகளில் மண் மேடிட்டுக் கிடக்கின்றன.

இங்ஙனம் மண் மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்து, அவ்விடங்களிற் காணப்பெறும் பலதிறப்பட்ட பொருள்களை. ஆராய்ந்து அவற்றைப்பற்றிய உண்மைச் செய்திகளையும், அவற்றைப் பயன்படுத்திய பண்டை