பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

175


சிவிப் பின்புறம் முடியிடப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்து வண்டிகளே உலகிற் பழைமையானவை என்னலாம். சிந்து வெளி நாகரிக காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னரே எகிப்தில் வண்டிகள் தோன்றலாயின. டாக்டர் மக்கே சான்ஹு-தரோவில் இரண்டு மண் வண்டிகளைக் கண்டெடுத்தார். ஒன்று நன்னிலையில் இருந்தது; மற்றது சக்கரங்கள் இல்லாமல் இருந்தது.

ஹரப்பாவிற் கிடைத்த வண்டிகள் (1) இன்றைய வட இந்திய வண்டிகளைப் போலுள்ள சதுர வண்டிகள், (2) மோட்டார் லாரியைப் போன்ற சாமான் ஏற்றிச் செல்லும் வண்டிகள், (3) இக் காலத்துச் சாரட்டு வண்டியைப் போல எதிரெதிர் ஆசனங்களைக் கொண்ட வண்டிகள், (4) படகு போன்ற வண்டிகள் என நால் வகைப்படும். இவையன்றி இரண்டு உருளைகளைக் கொண்ட இரதங்கள் என்பனவும் இருந்தன. இவை மரத்தால் செய்யப் பட்டனவாதல் வேண்டும். இத்தகைய விளையாட்டு வண்டிகள் இன்னும் பஞ்சாப்பில் ஹொஷியர்ப் பூர் என்னும் இடத்திற் செய்யப்படுகின்றன.[1]

நாவிதத் தொழில்

கணக்கற்ற சுவரக் கத்திகள் கிடைத்துள்ளமையால் சிந்து வெளி மக்கள் க்ஷவரத்தில் மிக்க அக்கறைகொண்டு இருந்தனர் என்பதும், அத்தொழிலாளர் பலர் இருந்தனராதல் வேண்டும் என்பதும் கூறாமலே விளங்கும் செய்திகளாம்.

தோட்டி வேலை

‘நகர சுகாதாரத்தைக் கவனித்த பெருமை, அப்பண்டைக்கால நாகரிக நகரங்கள் அனைத்தையும் விட மொஹெஞ்சொ - தரோவுக்கே உரியதாகும்’ என்று ஸர் ஜான் மார்ஷல் கூறுதலால், அந்நகராண்மைக் கழகத்தினர்


  1. 1. M.S.Vat’s ‘Excavation at Harappa, ‘Vol.I pp.99, 100, 451, 452.