பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மொஹெஞ்சொ - தரோ


பதக்கம் உலோக வளையத்தில் பொருத்தப் பெற்றுக் கோவில் அதிகாரிகளால் மக்கட்கு அளிக்கப்படும் சிறப்புடைப் பொருளாக இருந்திருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர். உண்மை உணர்ந்தவர் யாவர்?

கடவுள் உருவங்களின் ஊர்வலம்

சமயக் குறிகள் எனக் கருதப்படும் எருது முதலிய விலங்கு களை மக்கள் தூக்கிச் செல்வது இரண்டு முத்திரைகளில் காணப் படுகிறது. ஒருவன் ஒரு கம்பத்தில் எருது உருவத்தை வைத்துத் துக்கிச் செல்கிறான். அவன் பின்னர், வேறு ஒருவன் பலிபீடம் அல்லது தொட்டி போன்ற ஒன்றைத் தூக்கிச்செல்கிறான்.மூன்றாம் மனிதன் வேறு ஒர் உருவத்தைச் சுமந்து செல்கிறான். இவ்வூர்வலக் காட்சி, இன்றைக் கோவில் விழாக் காலங்களில் தூக்கி வரப்படும் நந்தி வாஹனம் முதலியவற்றை நினைப்பூட்டுகின்றது அன்றோ?


நேர்த்திக் கடன்

கருப்பவதிகளைக் குறிக்கும் பதுமைகள், கைக் குழந்தை ஏந்தி நிற்கும் தாயைக் குறிக்கும் பதுமைகள், தவழ்ந்து செல்லும் குழந்தைகளைக் குறிக்கும் பதுமைகள் முதலியனவும் விலங்குப் பதுமைகளும் நேர்த்திக் கடன் பொருட்டுக் கோவில்களில் வைக்கப்பெற்றனவாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். இப் பழக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது கவனிக்கத் தக்கது. இங்ஙனம் செலுத்தப்பட்ட நேர்த்திக்கடன் பொருள்கள் எல்லாக் கோவில்களிலும் இருத்தலைக் காணலாம்.

இசையும் நடனமும்

சமயத் தொடர்புடைய களிமண் தாயித்து ஒன்றில் சில உருவங்கள் காணப்படுகின்றன. ஒருவன் மத்தளம் அடிக்கிறான்; சிலர் அவ்வோசைக் கேற்ப நடிக்கின்றனர். தாயித்துச் சமயத் தொடர்புடையதாக இருத்தலின், அதில்