பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

205


சுருங்கக் கூறின், இன்று ஹிந்து மதத்தில் உள்ள பெரும்பாலான வழிபாடுகளும் பழக்க வழக்கங்களும் சிந்து வெளி மக்களுடைய சமயத்தனவே எனக் கூறி முடித்தல் தவறாகாது.

சைவத்தின் பழைமை

இப்பல வகை வழிபாடுகள் இன்றும் இருக்கின்றன. எனினும், இவை அனைத்தையும். இக்கால ஹிந்துக்கள் அனைவரும் பின்பற்றுதல் இல்லை அன்றோ? உயர்ந்தவர் சிவலிங்கம், கண்ணன் முதலிய பெருந் தெய்வங்களையே வழிபடுகின்றனர். கிராமத்தவரும் பாமர மக்களுமே மரவணக்கம் முதலியவற்றைக் கைக்கொண்டுள்ளனர். இங்ஙனமே, அப்பண்டைக் காலச் சிந்து வெளி மக்களுள் கல்வி கேள்விகளால் உயர்ந்த பெருமக்கள் பெருங் கடவுளரை வழிபட்டு வந்தனர்? தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் பலவகைத் தெய்வங்களை வழிபட்டு வந்தனராதல் வேண்டும். இஃது எங்ஙனமாயினும், இவ்வாராய்ச்சியால் அறியப்படும் உண்மை ஒன்றுண்டு. அஃதாவது, சைவ சமயம் சிந்துவெளி நாகரிகத்துக்கும் (கி.மு.4000க்கு) முற்பட்ட பழைமையுடையது என்பதே ஆகும். அஃது இன்னும் எவ்வளவு பழைமையுடைய தென்பதை வரையறுக்கக்கூடவில்லை. அச்சமயம் உலகத்திலேயே மிக்க பழைமை வாய்ந்து, இன்றளவும் இருந்துவரும் சமயம் என்பதை மறத்தல் ஆகாது.[1]


  1. “Among the many revelations that Mohenjo-Daro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that, Saivism has a history going back to the Chalcolithic Age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world”, - Sir John Marshall in his preface to Mohenjo-Daro and the Indus Civilization, ‘Vol, I. P. vii.