பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16. சிந்துவெளி எழுத்துகள்

எழுத்து ஆராய்ச்சியாளர்

சிந்துவெளியிற் கிடைத்த முத்திரைகளிற் பொறிக்கப் பட்டுள்ள சித்திரக் குறிகளே சிந்துமக்கள் மொழிக்கு உரிய எழுத்துகள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவ் வெழுத்துகளை வகைபடுத்தி, ‘சிந்து வெளியின் பண்டை எழுத்துக் குறிகளின் பட்டியல்’ என்றும்,[1] பண்டை இந்திய எழுத்துகளின் அமைப்பு முறை[2] என்றும், ‘சிந்து வெளி எழுத்துகள்’[3] என்றும் அறிஞர்கள், தாம் அறிந்தவரை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கட்குப் பிறகு டாக்டர் ஹன்ட்டர் என்னும் பேரறிஞர் சிந்துவெளி எழுத்துகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, அழகிய நூல் ஒன்றை 1934 இல் வெளிப்படுத்தியுள்ளார்.[4]

படிக்க முடியாத எழுத்துகள்

இந்த எழுத்துகள் படிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இவை படிக்கப்பட்ட பின்னரே சிந்துவெளி மக்களின் உண்மை வரலாற்றை உள்ளவாறு உணரக்கூடும். இத்தகைய எழுத்துகள் சுமேரியாவிலும் கிடைத்துள்ளன: பசிபிக் பெருங் கடலில் உள்ள ஈஸ்டர் தீவிலும் கிடைத்துள்ளன. எகிப்தியப் பண்டை எழுத்துகளும், ஸைப்ரஸ் தீவில் கிடைத்த பழைய எழுத்துகளும், லிபியாவில் கிடைத்த எழுத்துகளும் சிறிது வேறுபாட்


  1. C.J.Gadd’s ‘Sign-List of Early Indus Script’ in ‘MohenjoDaro and the Indus Civilization’. Vol. II. chapt. XXII.
  2. Sidney Smith’s Mechanical Nature of the Early Indian writing.
  3. Prof. Langdon’s The Indus Script’ in Mohenjo-Daro and the Indus Civilization, Vol. II, chapt. XXII.
  4. Dr.G.R.Hunter’s ‘The Script of Harappa and Mohenjo-Daro.