பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

229


இருந்தவர் மத்தியதரைக் கடலினத்தார் என்பதும், அவர்கள் நாளடைவில் ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலப்புண்டு விட்டனர் என்பதும், அதே காலத்தில் அல்லது சற்றுப் பின் மங்கோலியர், அல்பைனர் என்பவர் சிறு தொகையினராய் ஆங்காங்கு இருந்தனர் என்பதும் நன்கறியலாம். இது நிற்க.

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த எலும்புக் கூடுகள்

இந்திய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த கர்னல் செவெல், டாக்டர் குஹா என்னும் அறிஞர்கள் மொஹெஞ்சொ - தரோவிற் கிடைத்த எலும்புக் கூடுகளையும் மண்டை ஒடுகளையும் நன்கு சோதித்து, ‘இந்நகரின் இறுதிக் காலத்தில் இங்கு, (1) ஆஸ்ட்ரேலியர், (2) மத்தியதரைக் கடலினர், (3) மங்கோலியர், (4) அல்பைனர் என்னும் நால்வகை மக்கள் இருந்தனராதல் வேண்டும்’ என்று கூறியுள்ளனர். (1) அங்குக் கிடைத்த ஆஸ்ட்ரேலியர் மண்டைஓடுகள் கிஷ், அல் உபெய்ட், உர் என்னும் மெசொபொட்டேமிய நகரங்களிற் கிடைத்த மண்டை ஒடுகளையும், ஆதிச்சநல்லூரிற்[1] கிடைத்த மண்டை ஒடுகளையும் பெரிதும் ஒத்துள்ளன. (2) மத்திய தரைக்கடல் இனத்தார். மண்டை ஒடுகள் நால், கிஷ், அநவு, சியால்காட், பயனா என்னும் இடங்களிற் கிடைத்த சில் மண்டை ஒடுகளை ஒத்துள்ளன. (3) மங்கோலிய அல்பைனர் எலும்பு ஒன்றே கிடைத்தது. (4) அல்பைனர் மண்டை ஒடு ஒன்றே கிடைத்தது.[2]

மங்கோலிய பண்டை ஓடு ஒன்றே கிடைத்திருப்பதாலும், அது நகர அடிமட்டத்தின் மேற்போக்கான இடத்திற்றான் கிடைத்திருப்பதாலும், அதைக் கொண்டு


  1. ஆதிச்சநல்லூர் தமிழ்நாட்டுப் பகுதியாகும். இன்றுள்ள தமிழரிடம் அர்மீனியர், மத்தியதரைக் கடலினர் ஆஸ்ரேலியர் இவர் தம் கலப்பைக் காணலாம் என அறிஞர். அறைந்துள்ளதைக் காண்க. Hindu Civilization p. 37,39.
  2. Mohenjo-Daro, and The Indus Civilization, Vol.I. pp. 107,108