பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மொஹெஞ்சொ - தரோ


தவறாக எந்த முடிவும் செய்துவிடலாகாது. பிற்காலத்திற் பாரசீகத்தில் இருந்த மங்கோலியர் சிலர் மொஹெஞ்சொ-தரோவிற் குடிபுகுந்திருக்கலாம். மேலும், அத்தலை ஒடு கிடைத்த இடத்திலேயே மங்கோலியர் உருவம் கொண்ட பதுமைகளும் கிடைத்தமையால், அவ்விடம் அவர்கள் குடி புகுந்து இருந்த இடமாகலாம். அல்பைனர் ஒடு ஒன்றே கிடைத்ததால், அதைப் பற்றி என்ன கூறுவது? அது, வாணிபத்தின் பொருட்டு வந்த அல்பைனரையே குறிப்பதாகலாம். எலும்புக் கூடுகளுள் பல ஆஸ்ட்ரேவியரையும் மத்தியதரைக் கடலினரையுமே குறிக்கின்றன. முன்னர் உயரம் இன்றுள்ள ஆஸ்ட்ரேலியனது சராசரி. உயரமாகிய 152 செ.மீ. ஆகும். பின்னவருள் ஆடவர் உயரம் 161 செ.மீ. பெண்டிர் உயரம் 142 செ.மீ, 131 செ.மீ.ராக இருந்தது. இவ்வுயர அளவாலும், மொஹெஞ்சொ-தரோவில் இருந்த வீட்டு வாயில்களின் உயரம் 165 செ.மீ.க்கு மேல் இல்லை; பல வீடுகள் குட்டை மனிதர்க்கென்றே கட்டப்பட்டனவாகக் காணப்படுகின்றன என்னும் ஆராய்ச்சியாளர் கூற்று உண்மையாதல் காண்க.[1]

காலம் யாது?

எனவே, மொஹெஞ்சொ-தரோவில் பெரும்பாலும் அந்நகரத்திற்கே உரியவராக வாழ்ந்தவர் முன்னிருந்த ஆஸ்ட்ரேலியரும், அவர்களை வென்று உயரிய நாகரிகத்தைப் பரப்பிய மத்தியதரைக் கடலினருமே ஆவர் என்பது நன்கு விளங்குகின்றது அன்றோ? இங்ஙனம் காணப்பட்ட இம்மக்களது நாகரிக காலம் கி.மு.3250 கி.மு2750 ஆக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் முடிபாகும்.

இம்மக்கள் வாழ்க்கை

இங்ஙனம் இப்பெருநகரில் வாழ்ந்த மக்கள் பயிர்த் தொழிலிலும் வாணிபத்திலும் சிறந்திருந்தனர்; கால் நடைகளை


  1. Mackay’s ‘The Indus Civilization’ pp. 201, 202.