பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மொஹெஞ்சொ - தரோ


படையைக் கண்டேன். அவன் முகிற்படைக்குள் மறையும் பகலவன் போலக் காடுகளுக்குள் மறைந்துவிட்டான்’ என்று கூறினான்... இந்திரன் பிரஹஸ்பதியைத் துணைவனாகக் கொண்டு, அக்கடவுளற்ற படையை அழித்தான். இந்திரன் ரிஜஸ்வான் (ஆரியன்) உதவியைக் கொண்டு கிருஷ்ணனுடைய சூல்கொண்ட மகளிரைக் கொன்றான்... முதுமைப் பருவம் உடம்பை அழிப்பது போல இந்திரன் 50,000 கிருஷ்ணரைக் கொன்றான்....[1] “ஆரியர் இன்னவர்தாசர் இன்னவர் என்பதைப்பகுத்துணர்க.... ‘இந்திரனே, இடி முழக்கம் செய்பவனே, தாசரை அழி: ஆரியர்தம் வன்மையையும் பெருமையையும் மிகுதிப்படுத்து. இந்திரன் தாஸ்யுக்களை அழித்து, அவர் தம் நிலங்களை ஆரியர்க்குப் பங்கிட்டான். இந்திரன் ஆரியர்க்கு வலக்கையால் ஒளி காட்டி, இடக்கையால் தாஸ்யுக்களை அழுத்தினான்.... ஆரியர் இந்திரன் உதவியால் தாஸ்யுக்களை அழித்து, அவர்தம் செல்வத்தைப் பெறுகின்றனர்.... ‘நாங்கள் தாஸ்யுக்கள் நாற்புறமும் சூழ வசித்து வருகின்றோம். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; எதையும் நம்பாதவர்கள். அவர்கள் தமக்கென்றே உரிய பழக்க வழக்கத்தினர்; சமயக் கொள்கைகளை உடையவர்; அவர்கள், மனிதர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர்கள்; அவர்களை அழித்துவிடு’ (ஒரு ரிஷியின் சுலோகம்)..... இந்திரனும் அக்நியும் சேர்ந்து, தாசருடைய பாதுகாவல் மிகுந்த 90 நகரங்களை அழித்தனர்.... தாசர்கள், மாயச் செலவில் வல்லவர்கள்: மாயவர்கள்.....[2]

“இந்நிலம் தாசரைப் புதைக்கும் சவக்குழியாகும், ....இந்திரன் 30,000 தாசர்களைக் கொன்றான்; 50,000 கிருஷ்ணரைக் கொன்றான்..... கறுத்தவரை ஒழிக்க நடத்திய போரில் ‘யஜிஸ்வான்’ என்பவன், ‘வங்க்ரிதன் என்பவனுக்கு உரியனவாக இருந்த 100 நகரங்களைத் தாக்கினான்.....


  1. P.T.S.Iyengar’s ‘The Stone Age in India’, pp. 49-51
  2. N.K.Dutt’s, ‘The Aryanisation of India’, pp.74-76.