பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மொஹெஞ்சொ - தரோ


மொஹெஞ்சொ-தரோவில் ஒரே இடத்தில் பல எலும்புக் கூடுகள் கிடைத்தன. அவை, எதிரிகளிடமிருந்து தப்பியோட முயன்ற மக்களுடையனவாக இருக்கலாம் என்று டாக்டர் மக்கே கருதுகிறார். அக்கருத்துப் பொருத்தமானதே என்று அவற்றை ஆராய்ந்த டாக்டர் பி.எஸ்.குஹா என்பவர் கூறுகின்றார். பல மண்டையோடுகள் பழைய சுமேரியர் மண்டை ஒடுகளோடு ஒருமைப்பாடு கொண்டவை”.[1]

“எலும்புக் கூடுகளைச் சோதித்தபோது, சில தலைகள் கூரிய கருவியால் வெட்டப்பட்டன என்பது தெரிகிறது. பகைவராற் படுகொலை நடந்ததென்று நினைக்க இடம் ஏற்படுகிறது”.[2]

“சிந்துவெளி மக்கள் இந்திர வணக்கத்தையும் அக்நி வணக்கத்தையும் அறியாதவர்: மர வணக்கம் உடையவர்: பகைவரை அடக்க மந்திர மாயங்களைக் கையாண்டவர்; இவை ஆரியர்களின் பழக்கங்கள் அல்ல. ஆனால், இவை ரிக், வேதத்திற்குப் பிற்பட்ட யசுர்-அதர்வு வேதங்களில் காணப்படுகின்றன. ஆதலின், சிந்துவெளி மக்களுடைய சமயப் பழக்கங்கள் சில வேதகால ஆரியரிடம் பரவின என்பது அங்கைக் கனி.[3]

“ஹர்ப்பா, மொஹெஞ்சொ-தரோ முதலிய நகரங்கள் இருத்தலைக் காணின், ரிக்வேத ஆரியர், அந்நியர் நகரங்களையும் ஊர்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும் என்பது வெளியாம். இந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் ‘பணிக்’ (பணிஸ்-வணிக்) என்பவராக இருக்கலாம். அச்சொல் பணம், என்பதிலிருந்து வந்திருக்கலாம். நாம் ஆராய்ந்த அளவில்,


  1. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’, Vol.I. pp. 614, 615, 648.
  2. Sir John Marshall’s ‘Mohenjo-Daro and the I, C’, Vol.I.p.648.
  3. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the Indus Valley’, p.35.