பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

243


பெற்றனர்; ஆரியர்க்கு முன் இந்தியா நாகரிக நாடன்று” என்றெல்லாம் சரித்திர ஆசிரியரால் இழித்துரைக்கப்பட்டனர். பிஷப் கால்ட்வெல் என்னும் பேரறிஞர் திராவிடமொழிக்ளைத் திறம்பட ஆராய்ந்து, ‘திராவிடர் நகரங்களில் வசித்தவர்கள்;. நாகரிகம் உடையவர்கள்; தமக்கென்று அமைந்த பழக்க வழக்கங் களை உடையவர்கள்; அரசர்களை உடையவர்கள், பல்வகைக் கருவிகளை உடையவர்கள் எழுத்து முறை பெற்றவர்கள்’ என்று எழுதியிருந்தும், அவ்வுண்மைகள் சரித்திராசிரியரால் புறக்கணிக்கப் பட்டிருந்தன. ஆனால், அறிஞர் அசட்டையை அவமதிப்பதே போல் சிந்துவெளிநாகரிகம் வெளிக் கிளம்பலாயிற்று ஹரப்பா, மொஹெஞ்சொ-தரோ முதலிய நாகரிகங்கள் ஆராய்ச்சியாளர் கண்களைக் கவர்ந்தன...”.[1]

மொழி ஆராய்ச்சி கூறும் உண்மை

“ஆரியரது கரடு முரடான வடமொழியைத் திராவிடரும் கோலேரியரும் பேசியதால் உண்டானவையே இன்றுள்ள வட இந்திய ஆரிய மொழிகள். இவர்கள் கூட்டுறவால் வேத மொழி இன்றைய மாறுதல் பெற்றதோடு, திராவிட முறைப்படி எளிமையாக்கவும் பட்டது. வேத கால ஆரியர் நாகரிகம் ஹெல்லென்ஸ், இத்தாலியர், ஜெர்மானியர் இவர்தம் நாகரிகத்தையே முதலில் ஒத்திருந்தது. ரிக்வேதத்தில் மறுபிறப்புப் பற்றிய பேச்சே இல்லை. ஆன்மவுணர்வுடைய அநாரியரிடமிருந்தே இதனை ஆரியர் பெற்றனராதல் வேண்டும். பஞ்ச பூதங்களைப் பற்றிய சில நினைவுகள் திராவிடருடையனவே. திராவிடக் கடவுளர் வழிபாட்டையும் ஆரியர் கைக்கொண்டனர். ரிக்வேத மொழி பல அம்சங்களில் இந்து-ஐரோப்பிய மொழிகளை ஒத்திருப்பினும், உச்சரிப்பில் மாறுதல் அடைந்துவிட்டது. ரிக் வேத மொழி திராவிடச் சொற்களையும் கோலேரியர் சொற்களையும் கடன் பெற்றது. அவற்றுள் சில வருமாறு :- அணு, அரணி, கபி, கர்மார (கருமான்)


  1. Patric Carleton’s ‘Burried Empires’, p.140