பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

மொஹெஞ்சொ - தரோ


பதை நன்கறியலாம். வங்க மொழியும் திராவிட மொழிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. கொகா (மகன்), குகீ (மகள்) என்னும் வங்கமொழிச் சொற்கள் ‘ஒராஒன்’ மொழியில் கொகா, கொகீ என்று வழங்குகின்றன. தெலா (தலை) நொலா (நாக்கு) என்பன தெலுங்கு மொழியில், ‘தல’, ‘நாலு’ என வழங்குகின்றன. தமிழில் உள்ள ‘கள்’ (Gul) விகுதியே வங்க மொழியில் குலீ (Guli), குலா (Gula) என்று வழங்குகின்றன. இவ்வாறு திராவிடத்திலிருந்து வந்துள்ள சொற்கள் பலவாகும். அவற்றைத் திரு பி.ஸி.மஜும்தார் என்பவர் ‘சாஹித்ய பரிஷத் பத்திரிகை’யில் (Vol.XX-Part I) விளக்கமாக வெளியிட்டுள்ளார். ...இன்ன பிற காரணங்களால், ஆரியர் வருகைக்கு முன் வடஇந்தியா முழுவதிலும் திராவிடர் இருந்தனர் என்பது உண்மையாதல் காண்க”.[1]

“வடமொழி இந்து-ஐரோப்பிய மொழி இனத்தைச் சேர்ந்தது. ஆனால், மற்ற இந்து ஐரோப்பிய மொழிகளில் இல்லாத மிகப் பல வினைப் பகுதிகளும் சொற்களும் வடமொழியிற் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலன திராவிடரிடமிருந்து கடன் பெற்றனவே என்று கூறலாம். இதனால், வட இந்தியாவில் இன்றுள்ள மக்கள் தூய ஆரியர் அல்லர், ஆரியர், திராவிடர் முதலிய பல வகுப்பாருடன் கலந்து விட்டனர்; அப்பலருள்ளும் திராவிடருடனேயே மிகுந்த கலப்புக் கொண்டனராதல் வேண்டும் என்பது தெரிகிறது”.[2]

சிந்து மக்கள் மொழி ஆரியர்க்கு முற்பட்டது. அதற்கு உரிய மூன்று காரணங்களாவன:-(1) ஆரியர்க்கு முன் வட இந்தியாவில் சிறந்த நாகரிகத்தோடு வாழ்ந்தவர் திராவிடரே ஆவர்; (2) சிந்து வெளிக்கு அண்மையிலேயே இன்றளவும் திராவிட மொழிகள் ப்ராஹுயி மொழியிற் காணப்படலால்,


  1. Bhandarkar’s ‘Lectures on the Ancient History of India’ 1918, pp.25-28.
  2. Grierson’s ‘Linguistic Survey of India’, Vol IV. pp. 278-279.