பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மொஹெஞ்சொ - தரோ


“வடமொழியில் இராமாயணம் பாடிய வான்மீகி முனிவர் தமிழ்ப்புலமை உடையவர் என்பது பல காட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவர், இராமபிரான் வடிவழகைக் கூறும் மிகச்சிறிய பகுதி கொண்டு, பெரிய பகுதிக்குச் ‘சுந்தர காண்டம்’ எனப் பெயர் இட்டார்; (2) வடமொழிப்படி ‘செளந்தர்ய காண்டம்’ என்னாது, தமிழ் வழக்குப்படி ‘சுந்தர காண்டம்’ என்றே தம் வடமொழி நூலில் பெயரிட்டனர்; (3) வடமொழியில் இல்லாத பழமொழியைத் தமிழில் உள்ளவாறே ('பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதில், ‘கால்’ என்பது உறைவிடம் எனப் பொருள்படும்; ஆனால் வான்மீகியார் அதனைப் பாதம் என்றே) மொழி பெயர்த்தனர். இன்ன பிற காரணங்களால், அவர் தமிழ்ப் புலமை உடையவர் என்பதை உணரலாம்” எனவே, புறநானூற்றிற் காணப்படும் 358 - ஆம் செய்யுள் அடியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வான்மீகியார்’, இராமாயணத்தை வடமொழியிற் பாடிய வான்மீக முனிவரே என்னலாம்.

“அவர் அதுமான் சீதையிடம் பேசுமுன், (1) இலக்கண அமைதி பெற்ற மானுஷ வாக்கிற் பேசுவேன்; (2) தேவ பாஷையிற் (சம்ஸ்கிருதம்) பேசுவேன்; (3) பொருள் விளங்கத்தக்க மானுஷ பாஷையிற் பேசுவேன்; இறுதியிற் குறிப்பிட்டதிற் பேசினால் இவள் எளிதில் உணர்வாள்’ என்று முடிவுகொண்டு, மதுரமொழியிற் பேசினான்” என்று எழுதியுள்ளார்.

“அநுமன் குறிப்பிட்ட தேவமொழி வடமொழியே. மற்ற இரண்டும் தேவமொழிக்கு இணையான தமிழ் மொழியே ஆதல் வேண்டும். என்னை? அன்று தொட்டு இன்றளவும் ‘வடமொழி’ எனவும், ‘தென்மொழி’ எனவும் வழக்காறு கொண்டவை இரண்டே ஆகலான் என்க. மேலும், அது ‘மதுரவாக்’ (இனிய மொழி என்று கூறப்படுகிறது.அநுமன் குறிப்பிட்ட முதல் மொழி செய்யுள் நடையுடைய தமிழ்மொழி; மூன்றாவது,பேச்சுவழக்கில் உள்ள தமிழ் மொழி. இதைப்பற்றி, வான்மீகி உரையாசிரியர்