பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

மொஹெஞ்சொ - தரோ


‘மொழி, உடற்கூறு. செய்வினை என்னும் மூன்றும், மொஹெஞ்சொ-தரோவில் அண்மையிற் காணப்பட்ட புதை பொருள்களும் ஆகிய அனைத்தும் ப்ராஹுயி மக்கள் திராவிட இனத்தவரே என்பதையும் திராவிடர் நாகரிகம் மிக உயர்ந்ததும் பழைமையானதும் ஆகும் என்பதையும் தெளிவுற விளக்குகின்றன.[1]

இந்திய மக்கள் பற்றிய அறிக்கை

1901இல் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் எண்ணிக்கை பற்றிய அறிக்கையில் கீழ்வருவன காணப்படுகின்றன:

(1) “திராவிடர்க்கு முற்பட்டவர் - குட்டை உருவமும் அகன்ற மூக்கும் உடையவர்; காடுகளில் வசிப்பவர்.

(2) திராவிடர் - குட்டை உருவமும் கறுப்பு நிறமும் அடர்ந்த மயிரும் நீண்ட தலையும் அகன்ற முக்கும் உடையவர். இவர்கள் ஐக்கிய மண்டிலத்திற்குத் தெற்கே அக்ஷ ரேகை 76 டிகிரிக்குக் கிழக்கே உள்ள நிலம் முழுவதிலும் இருப்பவர்.

(3) இந்து-ஆரியர்:- உயரமான உருவமும் அழகிய - தோற்றமும் முகத்தில் நிறைந்த மயிரும் நீண்ட தலையும் குறுகி நீண்ட மூக்கும் உடையவர். இவர்கள் காஷ்மீரிலும் பஞ்சாபிலும் இராஜபுதனத்தின் சில பகுதிகளிலும் இருக்கின்றனர்.

(4) சிதிய-திராவிடர்-சிந்து, கூர்ச்சரம், மேற்கு இந்தியா என்னும் பகுதிகளில் இருப்பவர் நீண்ட தலை, குட்டை உருவம், குறுகிய అయ్యే இவற்றை உடையவர்.

(5) ஆரிய-திராவிடர்-கிழக்குப் பஞ்சாப், ஐக்கிய மண்டிலம், பீஹார் மண்டிலம் இவற்றில் இருப்பவர் நீண்ட தலை, கறுமையும் பழுப்பு நிறமும் கலந்த தோற்றம், 157.5 செ. மீ. முதல் 162.5 செ. மீ. வரையுள்ள உயரம்,


  1. K. Subbarayan’s article on ‘The Brahuis’, Hindu (16-2-41).