பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

19


யாற்றால் சிந்து வெளி மிக்க விளைச்சலையுடைய சிறந்த மருத நிலமாகக் காட்சி அளிக்கின்றது.[1]

சிந்து யாறு இதுகாறும் பதினெட்டு முறை தன் போக்கை மாற்றிக்கொண்டதாம். இஃது 1928 வரை மொஹெஞ்சொ தரோவுக்கு ஐந்தாறு கற்களுக்கு ஓடிக்கொண்டிருந்தது; அவ்வாண்டில், திடீரெனத் தன் போக்கு மாறி, மொஹெஞ்செதரேவுக்கு 1.5 கி. மீ. : தொலைவிற்குள் ஓடலாயிற்று. இதனால், இப்பொழுது தோண்டிக் கண்டெடுக்கப்பெற்ற மொஹெஞ்சொ-தரோவுக்கும் அங்குள்ள புதை பொருள் காட்சிச் சாலைக்கும் ஊறு நேராதிருக்க, நூறாயிரம் ரூபாய்ச் செலவில் 300 செ. மீ. உயரத்திற்குச் சுவர் ஒன்றை 1.5 கி.மீ . சுற்றளவில் எழுப்புவதென்று இந்திய அரசாங்கத்தார் முடிவு செய்தனர்.

பஞ்சாப் மண்டிலம்

சிந்து யாறு பாயும் வெளி இன்று பஞ்சாப், சிந்து என்னும் இரண்டுமண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. பஞ்சாப் மண்டிலம், சிந்து மாறும் அதன் உபநதிகளாகிய மேற்சொன்ன ஐயாறுகளும் பாய்கின்ற வளமுடைய நாட்டகும். பயிர் விளைச்சலுக்குரிய சத்துள்ள பொருள்கள் இந்த யாறுகளால் அடித்துக்கொண்டு வரப்பெற்று இம்மண்டிலம் சிறப்புற்று இருக்கின்றது. இங்குப்பயிர்த்தொழில் நிரம்ப நடைபெறுகின்றது; கோதுமை, நெல் முதலிய கூல வகைகளும் பருத்தி, எண்ணெய் விதைகள், கரும்பு முதலியனவும் ஏராளமாகப் பயிராகின்றன; கால்நடைப் பண்ணைகள் பல நடத்தப்படுகின்றன, ஆனால், கனிப்பொருள்கள் அருகியே காணப்படுகின்றன.

சிந்து மண்டிலம்

சிந்து மண்டிலம் என்பது ‘தார்’ பாலைவனத்துக்கு மேற்கிலும், பலுசிஸ்தானத்திற்குக் கிழக்கிலும் , பஞ்சாப்


  1. Nelsons ‘Encyclopaedia’, Vol:13, p. 129;