பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மொஹெஞ்சொ - தரோ


பணியில் இராவ்பஹதூர் கே. என். தீக்ஷித் என்பவர். முனைந்தார். அவருக்கு உதவியாளர் பலரும் இருந்தனர். அனைவரும் செய்த ஆராய்ச்சி விவரங்கள் சர் ஜான் மார்ஷல் மேற்பார்வையில் மூன்று பகுதிகளையுடைய பெரு நூலாக வெளியிடப்பட்டது.[1] 1927இல் இவ்வாராய்ச்சிக் கென்றே டாக்டர் ஈ. ஜே. ஹெச். மக்கே என்பவர் அமர்த்தப்பட்டார். அவர் இப்பகுதியில் ஆராய்ச்சியை நடத்தினார்; தம் ஆராய்ச்சியிற் கண்டவற்றைப்பற்றி விரிவான நூல்கள் எழுதியுள்ளார்.[2] அவருக்குப்பின், மொஹெஞ்சொ-தரோவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பொருட்காட்சிச் சாலையின் தலைவராகிய கே. என். பூரி என்பவரும், க்யூ. எம். மொனீர் (Q.M.Moneer) என்பவரும் வேறு சிலரும் ஆராய்ச்சிப் பணியில் இறங்கினர். இப்பெருமக்களின் இடைவிடா உழைப்பால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மண்ணுள் மறைந்து கிடந்த மாநகரமாகிய மொஹெஞ்சொ-தரோவின் பத்தில் ஒரு பாகம் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து உலகத்தை வியப்பால் திடுக்கிடச் செய்யும் பல அரிய விவரங்கள் வெளிப்பட்டன்.

குறிப்பிடத்தக்க செய்திகள்

மண்ணுள் மறைந்த மாநகரத்தைப்பற்றிய அரிய விவரங்கள் அடுத்துவரும் பகுதிகளில் விரிவாகக் கூறப்படுமாதலின், ஈண்டுக் குறிப்பிடத்தக்க சிலவற்றையே கூறுதும்:

இந்நகரம் ஹரப்பாவைப்போலப் பல அடுக்குகளை உடையது. அறிஞர் இதுவரை ஏழு அடுக்குகளைக் கண்டுபிடித்துள்ளனர்; ‘அவற்றின் அடியிலும் பல அடுக்குகள் இருக்கின்றன. ஆனால், நீர் ஊறும் இட்மாக இருப்பதால் அவற்றைத் தோண்டிக் காணல் இயலாதுபோலும்! என்று கூறி வருந்துகின்றனர்.


  1. Mohenjo-Daro and the Indus Civilization; Vols, I to III
  2. Dr. E.J.H.Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’. Vols. I & II and ‘The Indus Civilization.