பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மொஹெஞ்சொ - தரோ


இரத்தினக் கல் மணிகள் முதலியனவும் கிடைத்தன. பொதுவில் அவ்விடத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் அங்குக் கிடைத்திருக்கும் பொருள்கள் அனைத்தும் மொஹெஞ்சொ. தரோ ஹரப்பா ஆகியவற்றின் நாகரிகத்திற்கு இயைந்தவையாகவே இருக்கின்றன என்பது அறிஞர் வாட்ஸின் கருத்தாகும்.[1]

அலி முராத்

சிந்து வெளியில் ஆராய்ச்சிக்குரிய மற்றோர் இடம் அலி முராத் என்பது. அங்குச் சரித்திர காலத்திற்கு முற்பட்ட இரண்டு பெரிய மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றின் நீளம் 33000 செ.மீ, அகலம் 33000 செ.மீ. உயரம் 810 செ.மீ. ஆகும். அவற்றுள் ஒன்றின் உயரம் 750 செ. மீ. ஆகும். அதன் தென் பகுதியைத் தோண்டிய பொழுது கல்லால் கட்டப்பட்ட கிணறு ஒன்று காணப்பட்டது. அதன் உட்புறக் குறுக்களவு 20 செ. மீ. ஆகும். அக்கிணற்றை அடுத்து வளைவான கற்சுவர் ஒன்று 12.5 செ.மீ. உயரத்தில் காணப் பட்டது. அதன் நீளம் 5100 செ.மீ. என்று கணக்கிடப்பட்டுள்ளது. அது கோட்டைக்கமைந்த மதிற் சுவராக இருந்திருக்கலாம். அச்சுவர்க்கு உட்பட்ட இடத்தில் பல கட்டிடங்கள் இருந்தமைக் குரிய அடையாளங்கள் கிடைத்துள்ளன. அவை யாவும் கற்காலத்தை நினைப்பூட்டுகின்றன. அவ்விடத்தில் கிடைத்த மட் பாண்டங்கள் மேற்குறிப்பிட்ட பல இடங்களில் கிடைத்த மட்பாண்டங்களைப் போலவே வண்ணமிடப்பட்டும் சித்திரம் தீட்டப்பட்டும் இருக்கின்றன. அவ்விடத்தில் களிமண் அப்பங்கள் ஆயிரக் கணக்கில் கிடைத்துள்ளமை பெரிதும் வியப்பூட்டு வதாகும்.இவையன்றி, முழுவேலைப்பாடு அமைந்துள்ள பீப்பாய் வடிவம் கொண்ட உயர்தரக் கல் ஒன்று 5 செ.மீ.நீளத்தில் காணப் பட்டது. இதே வடிவங்கொண்டசெம்மணி ஒன்றும் கண்டெடுக்கப்


  1. ‘Annual Reports ofthe Archaeological Survey of India’ - (1930-1934). Part 1. pp.106. 107. M.S.Vat’s ‘Excavations at Harappa’ pp. 475-476.