பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மொஹெஞ்சொ - தரோ


இந்தச் செம்புக் காலத்திற்றான் கெளசாம்பி என்னும் வரலாற்றுச் சிறப்புடைய நகரம் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்று இராவ்பகதூர் தீக்ஷஜித் கருதுகின்றார். ஸர் ஜான் மார்ஷல் என்னும் அறிஞர் ‘பீட்டர்’ என்னும் ஊரில் ஒரு பகுதியை மட்டும் அகழ்ந்து ஆராய்ச்சி நடத்தியதன் மூலம், கல்லாலும் செம்பாலும் செய்யப்பட்ட பொருள்கள் பலவற்றைக் கண்டெடுத்தனர்.

பீகார் மண்டிலத்துப் புதை பொருள்கள்

பீகார் மண்டிலத்தில் கங்கையும் சோனையாறும் கலக்கும் இடத்தில் மோரியர் தலைநகரமான பாடலிபுரம் அமைந்திருந்தது. அது சரித்திரப் புகழ்பெற்ற பண்டை நகரமாகும்.அஃது இன்றுள்ள பாடலிபுரத்திற்கும் ஹாஜிப்பூர்க்கும் இடையில் இருந்த நகரம். அதன் பெரும் பகுதி கங்கையாற்றால் சேதமுற்றுவிட்டது என்று அங்குள்ளார் கூறுகின்றனர். எனினும், ஆராய்ச்சியாளர் நிலத்தை அகழ்ந்து பார்த்தபோது, அசோகனது அரண்மனையின் சிதைவுகளையும் பிற அரிய பெரிய பொருள்களையும் கண்டெடுத்தனர். இப்பொழுதுள்ள புதிய பாடலிபுர நகர சபையினர் அண்மையில் புதை கழிநீர் வடிகால்களை நிலத்திற்கு அடியில் அமைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது மோரிய வமிசத்தவர்.இந்நாட்டைஆட்சிபுரிந்த காலத்திற்கு உரியபண்டைக் குறியீடுகள் பலவற்றைக் கண்டெடுத்தனர்.[1]

நடு மண்டிலத்து வெள்ளித் தாம்பாளங்கள்

நடு மண்டிலத்தில் ஒர் இடத்தில் ஒரே சமயத்தில் 424 செம்புக் கருவிகள் கிடைத்தன. சோட்டா நாகபுரிப்பகுதியில் செம்புக் காலத்திற்கு உரிய இடங்கள் பல இன்னும் அகழ்ந்து பார்க்க வேண்டுபவையாக இருக்கின்றன. இம்மண்டிலத்தில் ஓர் ஊரில், திருத்தமாகச் செய்து முடிக்கப்படாத உளிகள் மூன்று


  1. L.A. Waddell’s ‘Report on the Excavations at Pataliputra’.