பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாகரிகத்தினும் உயர்ந்ததென்பது, தமிழ்மொழியின் பெருமை அக்காலத்திலேயே இன்னும் மிகுந்திருந்ததென்பதும், தமிழ்வளர்த்த தமிழ்ச் சங்கங்களில் முதற்சங்கம் குமரிக் கண்டத்திலிருந்தது என்பதும், இதுபோன்ற பல அருங்குறிப்புகளெல்லாமும் சங்க நூலாராய்ச்சிகளிலிருந்து வெளிப்பட்டன.

எனினும், காண்டல், கருதல், உரையளவைகளில், ஆராய்ச்சி என்பது கருதலளவையிலும் சங்கத் தமிழ் நூல்கள் உரையளவையிலும் அடங்குதலின் காண்டலளவையிலுந்தக்க சான்றுகள் கிடைக்குமாயின், இந்தியா முழுவதுமே ஒரு காலத்தில் திராவிட நாடு; திராவிட மக்களே பிற்காலத்திற் பல்வேறு இந்தியக் கிளையினராயினர் திராவிடமொழியே திரிந்து திரிந்து பல்வேறு இந்திய மொழிகளாயிற்று: திராவிட நாகரிகமே உலக நாகரிகத்திற்கு அடிப்படை இன்னும் திராவிட நாகரிகமே உயர்ந்ததாக உள்ளது’ என்னும் இவ்வளவு பெரிய புதை பொருளுண்மைகளை மிகத் தெளிவாகத் துணிந்து கொள்வதற்கு ஐயுறவில்லாத நிலைப்பு ஏற்படும். ஒரு கருத்தைத் துணிவதற்கு இங்ஙனம் மூவகையளவைகளும் முதன்மையானவை.

‘தமிழ்’ என்பதைப் பிறர் ‘திராவிடம்’ என்றனர்; தமிழ் மக்கள் அங்கங்கும் போக்குவரவின்றித் தங்கியகாலத்தில் அவர்கள் தமிழ்மொழியே பல்வேறு வகையான இந்திய மொழிகளாகத் திரிந்து நின்றன; ஒன்றோடொன்று கலந்து பின்னும் பலவாயின. மிகுதியாகத் திரிந்துவிட்டவை வங்காளம் முதலிய வட இந்திய மொழிகள்; ஒரளவில் திரிந்தவை தெலுங்கு முதலிய திராவிடமொழிகள்; மொழிதிரியவே தமிழ்மக்களும் அவ்வம் மொழிக் குரியவராய்

v