பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/64

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48

மொஹெஞ்சொ - தரோ


திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலிக் கோட்டங்களிலும் மேற்சொன்ன பலவகையானவையும் பல நிறமுள்ளவையுமான மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. திருநெல்வேலிக் கோட்டத்தைச் சேர்ந்த ஆதிச்ச நல்லூரில் தாமிரபரணியாற்றுக் கரையோரம், ஏக்கர் ஒன்றில் ஏறக்குறைய ஆயிரம் தாழிகள் வீதம் 114 ஏக்கர்களில் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றுள் இரும்பு, வெண்கலம், பொன் இவற்றாலான பொருள்கள் இருந்தன. குடிசைத் தாழிகள் (hut urns) சில சிந்து மண்டிலத்தில் உள்ள பிராமண பாத்திலும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டெக்கான் பகுதி வட இந்தியாவைவிடப் பழமையானது; வட இந்தியா கடலுள் மூழ்கியிருந்தபோது டெக்கான் பீடபூமி தனித்திருந்தது. ஆதலின், அதுவே புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பொருத்தமுள்ள இடம் ஆகும் என்று நில நூல் நிபுணர் அறைகின்றனர்.

திருவிதாங்கூர்

இது பண்டைச் சேரநாட்டின் பெரும் பகுதியாகும். இப்பகுதியில் மலைகள் பல. அம்மலைகள் மீதும், அவற்றை அடுத்துள்ள இடங்களிலும் பழைய கற்கால மனிதரும் புதிய கற்கால மனிதரும் இரும்புக்கால மனிதரும் இருந்தமைக்குரிய சான்றுகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அம்மக்கள், இறந்தவர் உடலங்களை எரித்து உண்டான சாம்பலையும் எலும்புகளையும் பெரும் தாழிகளில் அடைத்து அவ்விறந்தவர் பயன்படுத்திய பலவகைக் கருவிகளும் பாண்டங்களும் பிறவும் அத்தாழிகளுள் அடக்கிப் புதைத்தனர். அவ்விடங்களுக்குமேல் ஒழுங்கான பாறைக் கற்களை நட்டுச் சிறு மண்டபங்கள் அமைத்துள்ளனர். இத்தகைய மண்ட்பங்கள் பல மலையரையர், முதுவர் என்னும் நாகரிகமற்ற மக்கள் வாழ்கின்ற இடங்களில் காணப் படுகின்றன. ஓரிடத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அகப்பட்ட


1. R.K.Mookerji’s ‘Hindu Civilization’. pp.7-11