பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மொஹெஞ்சொ - தரோ


பெரிதும் பயன்படுத்தி வந்தனர் என்பதை அறிகிறோம். ‘இந்தச் சங்குகள் சிந்துவெளி மக்களுக்கு எங்ஙனம் கிடைத்தன? இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? சங்கைப் பயன்படுத்தும் முறை எங்குப் பெருகி இருந்தது? என்பவற்றைக் கவனித்தோமாயின், சிந்து வெளி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருந்த தொடர்பு தெற்றெனத் தெரியும்.

இந்திய நாட்டின் தென்கிழக்குக்கோடியில்(தமிழ் நாட்டில்) வாழ்ந்திருந்த தமிழ் மக்களிடமிருந்தே சங்குகள் சிந்துப் பிரதேசங்களில் வாழ்ந்திருந்த மக்களுக்குப் போயிருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.[1] ‘சங்கு அறுக்கும் குலத்தவர் என்றே ஒரு பகுதி மக்கள், தமிழ் நாட்டில் மிகப் பிற்பட்ட காலம் வரையிலும் இருந்திருக்கின்றனர். சங்குகளும் முத்துக்களும் தமிழ்நாட்டின் சிறந்த வாணிபப் பொருள்களாக இருந்தன என்பதைச் சங்க நூல்களாலும் பிற சான்றுகளாலும் அறியலாம்.

“வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந் தொழிந்த கொழுந்து”

என்னும் அகநானூற்று அடிகள் சிந்திக்கற்பாலன.

மேனாட்டார் முயற்சி

இத்தகைய ஆராய்ச்சித் தொண்டில் நம்நாட்டுச் செல்வர்கள் விருப்பங் கொள்வதில்லை. மேனாடுகளில் உள்ள செல்வர்களோ இங்ஙனம் இருப்பதில்லை, புதுமைகளைக் காணுவதில் ஒரு சாரார் ஈடுபட்டால், தொன்மைச் செய்திகளை அறிவதில் பிறிதொரு சாரார் ஈடுபடுகின்றனர். இவ்வுலகின் பல மூலைகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள வியத்தகு விவரங்களை எல்லாம் கண்டறிந்து, அப்போதைக்கப்போதுவெளியிடுதற்கு என்று மேனாட்டுச்செல்வர்


  1. Dikshit’s ‘Pre-historic Civilization of the I. V’, pp. 12, 13.