பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர அமைப்பும் ஆட்சி முறையும்

55


பட்டுள்ளன. மொஹெஞ்சொ-தரோவில் படகுகளில் ஏற்றப்படும் பொருள்கள் அதே ஆற்றில் யாதொரு தடையும் இன்றிச் சென்று அரபிக்கடலை அடைய வசதியுண்டு. அங்ஙனமே வெளி நாட்டுப் பொருள்கள் கப்பல்கள் மூலம் வந்து சிந்து மண்டிலத் துறைமுகத்தை அடைந்த பின், அப்பொருள்களைப் படகுகள் ஏற்றிக்கொண்டு மொஹெஞ்சொ-தரோவை அடைதலும் எளிதானது. இப்போக்குவரவு வசதி கருதியே அப்பண்டை வாணிபம் புகழ் பெற்ற மக்கள் ஆற்றோரங்களில் அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனராதல் வேண்டும்.

நகரம் அமைந்த இடம்

மொஹெஞ்சொ-தரோ நகரம் அமைந்துள்ள இடம் மிகப் பரந்த சமவெளியாகும். இந்நகரம் அமைந்துள்ள இடம் ஒரு சதுரமைல் பரப்புடையது. இதில் பத்தில் ஒரு பாகமே இப்பொழுது தோண்டப்பெற்று ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. தோண்டப்படாத பகுதி 15, 29, 92, 160 ச. செ. மீ. பரப்புடையது. அப்பகுதியும் தோண்டப்பெற்று ஒழுங்கான முறையில் ஆராய்ச்சி நடைபெறுமாயின், இந்நகரத்தைப்பற்றிய பல செய்திகள் உள்ளவாறு உணர்தல் கூடும். ஆயினும், இன்றுள்ள நிலையில் தோண்டி எடுக்கப்பெற்ற பத்தில் ஒரு பாகத்தை ஆராய்ந்த அளவில் இந்நகரத்தைப் பற்றிய தம் கருத்துக்களை ஆராய்ச்சி யாளர் விரிவாகக் கூறியுள்ளனர்.

தெருக்களின் அமைப்பு

இந்நகரத்தின் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் அமைந்துள்ளன. தென்கிழக்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என்பவற்றைக் கவனித்தே - நல்ல காற்றோடத்தை எதிர்பார்த்தே இத்தெருக்கள் அமைக்கப்பட்டன வாதல்வேண்டும்.காற்றுநகரின் அகன்றதெருக்களில் வீசும்பொழுது, குறுக்கேயுள்ள சிறிய தெருக்களிலும் புகுந்து எல்லா மக்கட்கும்