பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர அமைப்பும் ஆட்சி முறையும்

61


இவ்வாறு கட்டிடங்கள் உயர உயரப் பழைய கால்வாய்கள் பயனில ஆயின, அதனால் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டன.பல இடங்களில் பழைய கால்வாய்களின் பக்கச் சுவர்கள் உயர்த்தப் பட்டுள்ளன. சில இடங்களில் பழைய கால்வாய்கள் மீதே செங்கற்களை அடுக்கிப் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பழைய கால்வாய்கள் இடித்துத் தள்ளப்பட்டுப் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் கால்வாய்கள், பன்முறை திருத்தப்பெற்றும் புதியனவாக அமைக்கப்பெற்றும் உள்ளன.[கு 1]

மலம் கழிக்க ஒதுக்கிடம்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள பெரும்பாலான இல்லங்களில் மலம் கழிப்பதற்கு உரிய ஒதுக்கிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை இன்றும் நம் நாட்டில் உள்ளன போலவே இருக்கின்றன. அவற்றின் தள வரிசையும் புறச்சுவர்களும் செவ்வையாகவும் உறுதியாகவும் அமைக்கப் பெற்றுள்ளன. அவை நாள்தோறும் நகராண்மைக் கழகத்தார் அமர்த்தியிருந்த தோட்டிகளால் தூய்மை செய்யப்பெற்று வந்தன என்பதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. சில மாளிகைகளின் மேன் மாடங்களிலேயே இத்தகைய ஒதுக்கிடங்கள் இருக்கின்றன. அங்கிருந்து மலமும் நீரும், சுவருக்கு உள்ளே அல்லது வெளியே அமைத்துக் கீழே உள்ள தாழியோடு இணைக்கப்பட்டுள்ள குழை வழியே கீழே சென்றுவிட வசதி யிருந்தது என்பது தெரிகிறது. இவ்வொதுக்கிடங்கள் நீரோடும் அறையை அடுத்து அமைக்கப் பட்டுள்ளன. இவை பெரிதும் இன்று சிந்து மண்டிலத்தில்


  1. இங்ஙனம் பலமுறை அமைக்கப்பட்ட நகரம் அழிந்து மண் மேடிட்டுக் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு வரை கவனிப்பார் அற்றுக்கிடந்தது. அதன் பின்னரே அம்மண்மேடுகளில் ஒன்றைப் பெளத்தர்கள் கைக்கொண்டு, வெள்ளத்தினின்றும் தப்பும் பொருட்டுத் தரைமட்டத்தை உயர்த்தி, செங்கற்களையும் களிமண்ணையும் கொண் கட்டிடங் கட்டி வாழ்ந்தனர் என்பது தெரிகிறது.