பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மொஹெஞ்சொ - தரோ


காலத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய மன்றம்[1] அல்லது குப்த மன்னர் ஆட்சிக் காலத்தே இருந்த நகராண்மைக் கழகம்[2] முதலியவை மொஹெஞ்சொ-தரோ போன்ற பழைய இந்திய நகரங்களிலிருந்தே தோன்றினவாதல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் அறைந்து வியக்கின்றனர்.[3]

அவசியமே அறிவை வளர்ப்பது

இந்நகரத்தை அமைத்த பண்டை மக்களின் சுற்றுப் புறங்களில் கீர்தர் மலையடிவாரப் பகுதிகளில் இருந்த மக்கள் கற்குகைகளிலும் கல்லால் ஆன வீடுகளிலும் வசித்தனரே அன்றி நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திலர். எனவே, மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா போன்ற பண்டை நகரங்கள் அந்நகர மக்களின் அறிவு நுட்பத்தைக் கொண்டே அமைந்தனவாதல் வேண்டும். அவர்கள் வேறெவரையும் பார்த்து நகர அமைப்பு முறையைக் கற்றுக்கொண்டனர் என்று இன்றுள்ள ஆராய்ச்சி நிலையைக்கொண்டு கூறுதல் இயலாதது. ஏனெனில், அதே காலத்தில் சிறப்புற்றிருந்த எகிப்தியர், சுமேரியர் நகரங்கள் இவ்வளவு சிறப்புடையனவாக இல்லாமையே இங்ஙனம் வற்புறுத்திக் கூறுதற்குக் காரணமாகும்.

பிற நாடுகளில் இல்லாத நகர அமைப்பு

“நல்ல திட்டங்கள் இட்டுச் சிறந்த சுகாதார முறையில் நகரங்களை அமைத்தவர்கள் சிந்து மண்டில மக்களே ஆவார்கள். இத்தகைய திட்டம் கி.மு.2000 வரை ‘உர்’ என்னும் நகரில் தோன்றியதாகக் கூறல் இயலாது. அதே காலத்திற்றான் பாபிலோனியாவிலும் இத்திட்டம் தோன்றியது. எகிப்தில்


  1. Board System of the Mauryan Period.
  2. City Council System of the Gupta Period.
  3. K.N. Dikshit’s ‘Pre-histroic Cilvilization of the Indus Valley’, p.24.