பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடங்கள்

67


அக்காலத்துக் கொத்தர்கள் கட்டிட அமைப்பில் நிறைந்த அறிவுடையவர்களாகத் திகழ்ந்தனராதல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது.

அணி அணியான கட்டிடங்கள்

ஒவ்வொரு தெருவிலும் வீடுகள் ஒன்றுக்கொன்று இடைவெளியின்றிச் சேர்ந்தாற்போலவே அமைந்துள்ள . ஆயின் பிற்காலததில் சிந்துநதியில் வெள்ளம் உண்டாகி, அதனால் ஒரு முறை நகர அமைப்புக்குப் பங்கம் ஏற்பட்டதும், அணி அணியாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் சில மாறுதல் களைப் பெற்றன. அவற்றின் தரைமட்டம் உயர்த்தப் பட்டது. இங்ஙனம் மும்முறை தரை மட்டம் உயர்த்தப்பட் டுள்ளது. இவ்வாறு தரைமட்டம் உயர்த்தப் பட்டபின் கட்டப்பட்ட எழுப்பப்பட்ட சுவர்களோ வீடுகளோ அணி அணியாக இன்றிச் சிறிது உயர்த்தும் தாழ்ந்தும் முன்னும் பின்னுமாக மாறியுள்ளன. நகர அடிமட்டம் உயர்த்தப் பட்ட பின் போதிய இடம் இன்மையின், இவ்வாறு தாறுமாகக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டனவாதல் வேண்டும். தொடக்கத்தில் அமைந்துள்ள கட்டிட அமைப்பும், பின்னர் அமைந்துள்ள கட்டிட அமைப்பும் காண்போர்க்கு நன்கு காட்சியளிக்கின்றன. அகன்ற நெடுந்தெருக்களில் உள்ள இல்லங்களை விடக்குறுந் தெருக்களில் உள்ள இல்லங்களே நன்னிலையில் இருக்கின்றன.

பருத்த சுவர்கள்

பெரும்பாலும் எல்லாக் கட்டிடங்களின் சுவர்களும் பருத்தவையாக இருக்கின்றன. அவை 105 செ. மீ. முதல் 180 செ.மீ. வரை தடித்தவையாக இருக்கின்றன. சிந்து நதியின் வெள்ளத்தை எதிர்நோக்கியே இச்சுவர்கள் இவ்வளவு கனமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிற்கு மேற்பட்ட மேன் மாடங்களை அமைக்கும்பொழுது அவற்றின் பாரத்தைத் தாங்க வல்லவையாக இவை அமைந்திருத்தல்