பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடங்கள்

71

 படிக்கட்டின் அகலம் 100 செ.மீட்டராகும். இங்ஙனம் இரண்டு படிக்கட்டு வைத்துள்ள இல்லம் பெருந் தலைவனுடைய இல்லமாகவே இருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. வேறொரு பெரிய மாளிகையின் முன்புறம் 2550 செ. மீ. அகன்றுள்ளது பின்புறம் 290 செ மீ அகன்றுள்ளது. இங்ஙனம் இல்லத்தின் இருபுறமும் பரந்த இடம்விட்டுக் கட்டும் முறை அப்பண்டைக் காலத்திலேயே வழக்கில் இருந்ததென்பது பெரு வியப்புக்குரிய செய்தியே அன்றோ?

அரசனது அரண்மனையோ?

இதுகாறும் தோண்டிக் கண்ட கட்டிடங்கள் அனைத்தினும் மிகப் பெரியதாயுள்ள மாளிகை ஒன்றே அறிஞர் கவனத்தை மிகுதியும் கவர்ந்ததாகும். அம்மாளிகை 7260 செ.மீ நீளமும் 3360 செ.மீ. அகலமும் உடையது. அதை அடுத்துச் சற்றுக் குறைந்த அளவு 350 செ.மீ.நீளமும் 3480 செ.மீ அகலமும் உடைய பெரிய மாளிகை ஒன்று உள்ளது. அதற்கு அடுத்தாற்போல் மற்றொரு மாளிகை இருக்கின்றது. அதன் வடபுறச் சுவர் 2610 செ. மீ நீளம்: தென்புறச் சுவர் 2800 செ. மீ நீளம் மேற்குப்புறச்சுவர் 140 செ.மீ. நீளம் கிழக்குப்புறச் சுவர் 1465 செ. மீ நீளம் அக்கட்டிடத்துள் பல அறைகளும் ஒரு கிணறும் இருக்கின்றன; ஒவ்வொரு புறத்தும் 125 செ. மீ அகலமுள்ள சதுரத் துண்கள் சில இருக்கின்றன. இத்தூண்கள் அக்கட்டிட வாயிலின் வளைவுகளைத் தாங்குபவை என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அக்கட்டிடத்திற்கு மேன் மாடி இருந்திருத்தல் வேண்டும். அஃது இன்று காணுமாறில்லை.

அக்கட்டிடங்களை அடுத்துச் சிறு விடுதிகள் பல உள்ளன. அவை 1680 செ.மீ நீளமுடையன. அவை ஒவ்வொன்றிலும் நடுவில் நெடுந்துண்களைக் கொண்ட மண்டபமும் பல கூடங்களும் உள்வழிகளுடன் கூடிய பல அறைகளும் இருக்கின்றன. அந்த அறைகள் சாமான்களை வைப்பதற்கும், சமையல் செய்வதற்கும், படுக்கைக்கும், உணவு உட்கொள்ளவும், பிற தேவைகட்காகவும்